1912.10.29 ஆம் நாள் பிறந்தவர். நாவலர் பாடசாலையடி கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகக் கொண்டவர். மறுமலர்ச்சி பத்திரிகையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். பலவிதமான தமிழியல் சார்ந்த கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியவர். சிறந்த தமிழறிஞராக இருந்தாலும் கவிஞராகவும் தன்னை தமிழ் உலகில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலரை பயிற்றுவித்தல், புலவர் ஆற்றுப்படை ஆகிய நூல்களின் ஆசிரியருமாவார். மும்மொழித் தேர்ச்சியினையும் கொண்டவர்.2002.01.19ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.