Tuesday, February 27

பாலச்சந்திரன், சுப்பிரமணியம்

0

கே.எஸ்.பாலச்சந்திரன் என்று அழைக்கப்படும் இவர் 1944-07-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட மராட்சி கரவெட்டியில் பிறந்தவர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரிஉத்தியோகத் தராகப் பணியாற்றினார்;. 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவை யிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத் தில் நடித்தவர். 1965இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடை யேறிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து இதி காசம், சமூக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையானமேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க ஷார்மிளாவின் இதயராகம் டீடநனெiபௌ (ஆங்கிலம்) அஞ்சனா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத் தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20 இற்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார். தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகை களில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிறுகதைகளை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத்துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். இவர் தாகம், வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது), உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது) ஆகிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.இலங்கை வானொலியில், ‘கலைக்கோலம்’ சஞ்சிகை நிகழ்ச்சியையும், ‘விவேகச்சக்கரம்’ என்ற பொது அறிவுப்போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். 1973இல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974இல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய ‘அண்ணைறைற்’ இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும். அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரில் உள்ளிட்ட தனிநடிப்பு நிகழ்ச்சிகள் இறுவட்டாக வெளிவந்துள்ளன. இவர் கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்), நேற்றுப் போல இருக்கிறது, (கட்டுரைத் தொகுப்பு, 2011,கனகா பதிப்பக வெளியீடு) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!