தெல்லிப்பளை – கட்டுவனைச் சேர்ந்த வானொலி விளம்பரக்கலையின் விற்பன்னராக இலங்கை யில் மட்டுமன்றி தமிழகத்திலும் மிகுந்த புகழ்பெற்றவர்.மலிபன் கவிக்குரல் என்ற விளம்பர நிகழ்ச் சிக்காக இவர் தயாரித்த நாட்டார் பாடல்களே ஈழத்து மெல்லிசையின் தொடக்கப்புள்ளியாகும். இதனால் ஈழத்து மெல்லிசைக் கலையின் மூலவராக புகழ்பெறுகின்றார் பரா. இதயரஞ்சனி என்னும் கலைமஞ்சரி நிகழ்ச்சிகளுடன் கனிந்த குரலில் காலை வேளைகளில் ஒலித்த பாமாலை நிகழ்ச் சிகளில் சிவபுராணம், விநாயகர் அகவல், கந்தஷஷ்டி கவசம் மற்றும் இசைச் சித்திரங்களான சித்திரக் கலை, பாரதிபாதி நான்பாதி போன்ற ஆக்கங்கள் நெஞ்சை விட்டகலாதன. சந்தனமேடை, என் இதயத்திலே, அழகான ஒரு சோடிக்கண்கள், குளிரும் நிலவினிலே போன்ற இவரது பாடல்கள் இன்றும் பல ரசிகர்களை ஈர்ப்பன. இவரது பாடல்களின் தொகுப்பாக ஒலி ஓவியம் இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொன்மணி திரைப்படத்திலும் இவரது பாடல்கள் ஒலித்துள்ளன. சிறந்த ஒலியமைப்பாளருக்கான “உண்டா” விருதினையும் பெற்ற இவர் 1999.03.28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.