Wednesday, February 5

புற்றளை சித்திவிநாயகர் கோயில் புலோலி கிழக்கு பருத்தித்துறை

0

1740ஆம் ஆண்டளவில் தம்பப்பாய் என்ற இடத்திலே சிதம்பரநாயகர் என்ற அடியாருக்கு இவ்விடத்தில் 05 பரப்பு காணி சொந்தமாக இருந்தது எனவும் இந்நிலத்தை அவர் வரகுவிதைப்பதற்காக துப்பரவாக்கியபோது ஒருமாமரத்தின் அடியிலுள்ள புற்றினை வெட்டியபோது அதில் ஒரு சிறிய விநாயகர் உருவம் இருப்பதைக் கண்டார் எனவும் அதனை வணங்கி அன்று தொடக்கம் அதற்கு ஓலைக் கொட்டில் அமைத்து தீபமேற்றி வழிபட்டு வந்ததாகவும் இவ்வாறு பூசை நடத்தி வந்த இவர் இறந்ததும் அவரது பிள்ளைகள் ஊரில் உள்ள மாமிசம் உண்ணாத ஒருவரைக் கொண்டு பூசை செய்துவந்தனர் எனவும் நாளடைவில் இந்தியாவில் உள்ள வேதாரணியத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவசங்கரக் குருக்கள் தனது உறவினர் ஒருவரைத் தேடி வத்தை மூலம் பருத்தித்துறைக்கு வந்து சேர்ந்தார். இவ்விநாயகப்பெருமானுக்கு இவரும் பூசை செய்து வந்தார் எனவும் இவ்வாறு பூசை செய்து வந்த காலங்களில் இச்சுயம்பு விக்கிரகத்தின் அருட்தன்மை வளரத் தொடங்கிய தாகவும் இக்காலகட்டத்தில் தான் பூசை உரித்து தர்மசாசனம் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. ஊஞ்சல் பாட்டினை புலோலியூர் வித்துவான் க. முருகேசபிள்ளையால் இயற்றிபாடப்பட்டு வருகின்றது எனவும் இன்று விநாயகப்பெருமானுக்கு அழகிய சித்திரத்தேரும் அமைக்கப்பட்டு சிறப்புப் பெறுகின்றது. இவ்வாலயத்தின் வடக்கே புற்றளை மகா வித்தியாலயத்தை வளர்த்துக்கொண்டிருப்பதையும் அருகிலே தீர்த்தக் கேணியும் பூங்காவன மண்டபத்தையும் கொண்டிருப்பதுடன் கிழக்குப் புறத்தில் பூந்தோட்டத்தையும் ஆலயச் சூழலைச் சுற்றி நிழல்பரப ;பும் மரங்களையும் கொண்டு கோலாகலமாகக் காட்சி தருகின்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!