Sunday, December 22

விஸ்வநாதன், அருணாசலம்

0

1917-03-04ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை கந்தவரோதயக் கல்லூரியிலும் பயின்றதோடு, இலண்டன் மற்றிக்குலேசன் பரீட்சையிலும் சித்தியடைந்தார். இவர் சைவசமயத் தீட்சை பெற்று சைவாசார சீலராய் ஆன்மீகத்தில் ஆழ்ந்த பற்றுடைய வராய், திருமுறைகள், புராணங்களில் வல்லவராய்த் திகழ்ந்தவர். சைவ சித்தாந்தத்தில் மிகுந்த அறிவுடையவர். சிறந்த பௌராணிகர். கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், திருவாதவூரடிகள் புராணம் ஆகியவற்றை இசையுடன் பாடுவதுடன் விளக்கவுரை கூறுவதிலும் வல்லவர். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திலும், திருக்கேதீச் சரத்திலும் புராணபடனம் செய்து வந்தவர். கல்விப்பணி, சமயப்பணி மட்டுமல்லாது, சமூகப் பணியையும் செய்து வந்தவர். அளவெட்டி மகாஜனசபை, சனசமூக நிலையம், ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகள் ஆச்சிரமம், சைவ வாலிபர்சங்கம் ஆகியவற்றின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து அவற்றின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். இப்பெரியார் 2008-10-15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!