Saturday, April 5

குலரத்தினம், க.சி.

0

1916-10-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கந்தர்மடம் என்னும் இடத்தில் பிறந்தவர். ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, பாடநூல் எழுத்தாளராக,வரலாற்று ஆசிரியராக, சமய, இலக்கியத்துறையில் தெளிந்த சிந்தனையாளராக விளங்கிய இவர் யாழ்ப்பாணம் மில்க்வைற் நிறுவனத்தினால் மாதாந்தம் வெளியிடப்பட்ட மில்க்வைற் செய்தி ஏட்டின் பிரதம ஆசிரியராக பணியாற்றி பத்திரிகைத்துறையில் நீங்காத இடத்தினைப் பெற்றுக்கொண்டவர். தமிழ்கூறும் உலகு நினைவு கொள்ளுமளவிற்கு பல ஆராய்ச்சி நூல்களையும், இலக்கிய, இலக்கண நூல்களையும் வெளி யிட்டுள்ளார். “நோர்த் முதல் கோபல்லாப வரை” என்ற அரசியல் வரலாற்று நூலும், பாடநூலாகிய இந்துநாகரிகம் (மூன்று பாகங்கள்) என்பதனையும், பனைவளம் குறித்து எழுதிய நூலும் குறிப்பிடத்தக்கனவாகும். இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்த்துறைப் பாடநூல் எழுத்தாளராகக் கடமையாற்றி தமிழ் நூல்களின் சுவடிகளது பட்டியல்களைத் தேடித்தொகுத்து தமிழ் நூல்களை கனதியானதாக வெளியிட்டுள்ளார். 1924-02-06 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!