Friday, May 17

விபுலாநந்த அடிகள்

0

மயில்வாகனன் என்னும் இயற்பெயருடைய இவர் 1892.03.27 ஆம் நாள் மட்டக் களப்பு காரைதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். 1922 ஆம் ஆண்டு துறவியாகி சென்னை ஸ்ரீ இராமகிருஸ்ண மடாலயத்திற்குச் சென்று பயிற்சி பெற்று பரபோதனை தண்யர் என்னும் பெரும் பட்டத்தினைப் பெற்றார். 1942 ஆம் ஆண்டு தமிழக மடாலயச்சுவாமி “சுவாமி விபுலாநந்தா” என்னும் பட்டத்தினை வழங்கினார். யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பா~hபிவிருத்திச்சங்கத்தினை நிறுவி பிரவேச, பால,பண்டித வகுப்புகளை ஆரம்பித்து தமிழ் வளர்ச்சியினை ஏற்படுத்தினார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகவும், மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்.வைத்தீஸ்வரக் கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியவர். 1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்க விழாவில் நாடகத் தமிழ் பற்றி உரையாற்றினார். தமிழக செந்தமிழ் இதழில் எழுதிய கட்டுரைகளை மதங்க சூளாமணி என்னும் பெயரில் நூலாக வெளியிட்டவர். இந்நூலில் ஆங்கில நாடகங்களுடன் தமிழ் நாடகங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து நவீன நாடகத்தின் தோற்றுவாயினை ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் ஆரம்பித்து வைத்தவர். தமிழ் ,ஆங்கிலம், சமஸ்கிருதம், இலத்தீன், வங்கம், பாளி, சிங்களம், அரபு போன்ற பல மொழிகளில் புலமையுடைய பன்மொழி அறிஞராவார். பாரதியாரின் பாடல்களை பாடத்திட்டத்தில் சேர்த்த பெருமைக்குரியவர். பாரதியாரை முதுத்தமிழ்புலவர் மு.நல்லதம்பியுடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அறிமுகம் செய்தவர். 1947-07-19 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!