அம்மையார் அவர்களைப் பற்றிய
விபரஙை்களை தெரிந்தவர்கள் பதிவிடலாம்
1937-01-11 ஆம் நாள் மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர்.1998 ஆம் ஆண்டு விழிப்புலனற் றோரின் உயர்விற்காக வாழ்வகம் என்னும் அமைப்பினை தெல்லிப்பளையில் நிறுவினார். இந்நிறுவனத்தினூடாக விழிப்புலனற்ற மாணவர்கள் பலரை இணைத்து கல்வி பயில வைத்ததுடன் அவர்களை இன்றைய கால ஓட்டத்திற்கேற்ற உயர்நிலையில் வாழவைப்பதில் கர்மபலத்தியாக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். நாட்டின் அசாதாரண சூழ் நிலைகளினால் இடம் பெயர்ந்து சுன்னாகம் மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை வீதியில் இயங்கியதுடன் நிரந்தரக் கட்டடம் அமைத்து வாழ்வகத்தின் உயர்ச்சிக்கு வழிசமைத்தவர். இவரது தன்னலம் கருதாத இச்சேவை போற்றப்பட வேண்டியதாகும். 2006-09-11 அம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.