யாழ்ப்பாணம் – கோண்டாவில் என்னுமிடத்தில் 1910.05.07 ஆம் நாள் பிறந்தவர். மூத்த நாதஸ்வர மேதையளான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவர். 1988.05.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.