1929-07-19 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். இசைமணி, இசையரசு போன்ற கௌரவப் பட்டங்கள் பெற்றவர். 1996.10.17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.