பிரதேச செயலகம் அருகாமை, கோப்பாய் வடக்கு என்ற இடத்தில் பிறந்தவர். அமரர் ஆட்மணியம் அவர்களிடம் ஓவியக் கலையினைக் கற்று பிரபலமான தொழில் முறை சார்ந்த ஓவியனாக மிளிர்ந்தவர். இவருடைய கைவண்ணங்கள் பெரும்பாலும் ஆலயங்களினதும்,வர்தக நிறுவனங்களினதும் விளம்பரங்களாகவும், சுவர் ஓவியங்களா கவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிழலுரு வகையைச் சார்ந்த இவரது படைப்புக்கள் ஆலயங்களின் சுவர்களில் சுவரோவியங்களாக,திரை ஓவியங்களாக தொழில் சார்ந்த முறையில் மிகவும் பிரபல்யமடைந்திருந்தன. காலப்போக்கில் நவீன தொழில்நுட்ப முறைகளினால் இத்தகைய தொழில்முறை ஓவியர்களது வாழ்வில் வருமான வீழ்ச்சியினை ஏற்படுத்தியமை கண்கூடு.