.
யாழ்ப்பாணம் -நாச்சிமார்கோயிலடி என்னுமிடத்தில் 1919.05.19 ஆம் நாள் பிறந்தவர். நாதஸ்வர வித்துவானான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் நாதஸ்வரம் வாசித்துப் பெருமை பெற்றவர். நாதஸ்வர மேதையான இவரது நாதஸ்வர வாசிப்பில் வரும் ஒலியானது கிளாரினட், ஷணாய் போன்ற இசைக் கருவிகளின் நாதவேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்ததுடன், முகவீணையினது ஓசையினையும் உணரக்கூடியதாக அமைந்திருக்கும் என்பவராலும் பாராட்டப் பெற்றவர். இத்துறையில் இவருக்கு மிக்காரும் ஒப்பாரும் இல்லை என்று போற்றுமளவிற்கு இவருடைய நாதஸ்வர வாசிப்பானது அமைந்திருந்தமை கண்கூடு. பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவர். 1993.02.07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.