யாழ். தீபகற்பம் – நயினாதீவு என்னுமிடத்தில் 1945.06.20 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த நாதஸ்வரக் கலைஞரான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தவிலிசை மழை பொழிந்து புகழ்பெற்றவர். இவரது புதல்வன் பாபு அவர்கள் தனக்கென தனியான குழுவினரை ஒன்றினைத்து ஆலயங்களிலும் பொதுநிகழ்வுகளிலும் இசைச்சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.1999.06.15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.