1926-06-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இளவாலை என்றும் இடத்தில் பிறந்தவர். நாட்டுக் கூத்து, நடிப்பு, நெறியாள்கை போன்ற கலைகளில் 1936-2005 வரை ஈடுபட்டு வந்தவர். தனது பாடசாலைக் காலத்திலிருந்து நடிக்க ஆரம்பித்தவர். பதினாறு கூத்துக்களில் நடித்தது மட்டுமல்லாமல் ஒன்பது கூத்துக்களுக்கு அண்ணாவியாராகப் பணியாற்றியவர். இவரது கலைச் சேவையைப் பாராட்டி வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினர்கலைச்சுடர் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தியமை
குறிப்பிடத்தக்கது.