Sunday, January 5

திலகநாயகம்போல் , லயனல்

0

1941-07-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்னும் இடத்தில் பிறந்து அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை வீதி, கொக்குவில்மேற்கு என்னும் முகவரியில் வாழ்ந்தவர். இறப்பின் இறுதி நிகழ்வுகள் வலிகாமம் வடக்கிலேயே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது கர்நாடக சங்கீதத் துறையில் ஒப்பாரும் மிக்காருமாகப் போற்றத்தக்க வகையில் தனக்கென்றொரு தனியிடத்தை நீட்டி ஈழத்துக் கலாரசிகர்கள் மட்டுமல்லாது, உலக நாடுக் போற்ற வாழ்ந்த இசையுலக மாமேதையாவார். ஈழத்தில் 50 வருடங்களுக்கு மேலாகக் கலைப் பணியாற்றிவர் என்பதுடன் பல்வேறு இசையாளர் களையும் உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவருமாவார். இளைப்பாறிய உதவிக் கல்விப்பணிப்பாளராகிய இவர் 1961-1965 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று சங்கீத பூஷணம் முதலாம் பிரிவில் சித்தியடைந்தவர். ஆசிரிய நியமனம் பெற்று மன்னார், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் கடமையாற்றியவராவார். பலாலி ஆசிரிய கலாசாலையில் சங்கீத விசேட பயிற்சி பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற் றில் சுப்பர்கிரேட் பாடகராக முப்பத்தைந்து வருடங்களாகப் பாடிவந்தவர். நாற்பதிற்கு மேற்பட்ட மெல்லிசைப் பாடல்களின் சொந்தக்காரர். இலங்கையின் பலபாகங்களிலும் முன்னூறுக்கு மேற்பட்ட இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியவர். சங்கீதம், பரதநாட்டியம் சம்பந்தமான பாடவிதானத் திற்கமைய நூல்களை எழுதி வெளியிட்டதுடன் புதிய நோக்கில் செந்தமிழ் செவ்விசைப்பாக்கள் என்னும் நூலின் ஆசிரியருமாவார். இலண்டன், நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று பல இசைக்கச்சேரிகள் செய்ததோடு வானொலி, தொலைக்காட்சி, சஞ்சிகைகள், பத்திரிகைகள், இசை நிறுவனங்கள் பல்வேறு அமைப்புக்களின் பாராட்டுக்கள், சான்றிதழ்கள் பெற்றவர். கிறிஸ்தவப் பாடல்களை இசையமைத்து ஒலி நாடாவாகவும், இறுவட்டாகவும் வெளியிட்டவர். யாழ். இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் இசைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும்,2008,2009 இல் வருகைப் பரீட்சகராகவும், வடஇலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதர விரிவுரையாளராகவும், பரீட்சகரா கவும் நீண்டகாலம் பணியாற்றியவர். இவர் தனது அரங்கேற்றத்தினை தனது 24 ஆவது வயதில் அரங்கேற்றியவர். யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஈழத்தின் தலைசிறந்த நாடகக்கலைஞரான கலையரசு சொர்ணலிங்கமவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அன்று தொடங்கிய இவரது இசைப்பயணம் இறக்கும் வரை தொடர்ந்தது. இவரது இத்தகைய சேவை களைப்பாராட்டும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் உட்பட கலை அமைப்புக்களும் பாராட்டிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நல்லை ஆதீனத்தினரால் அவரது 20 ஆவது பீடாரோகணத்தின் போது பொன்னாடை போர்த்தியும், 1985,1986 களில் கம்பன் கழகத்தாரால் மூன்றுமுறை பொன்னாடை போர்த்தியதுடன் தங்கப்பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர். மேலும் 1992இல் யாழ். கர்நாடக இசைரசிகர் மன்றம் இவரது வெள்ளி விழாவை முழுநாள் விழாவாகக் கொண்டாடியதுடன், பல கல்விமான்களால் 25வருட சேவை பாராட்டப்பட்டு பொன்னாடைகள், பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு ‘ஸ்வரராகலயவிநோதசுரபி” என்றபட்டமும் வழங்கப்பட்டது. 1994 இல் இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத் தினால் கலைச்செம்மல் விருதும், 1999 இல் இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூ~ணம் விருதும், 2008இல் வடக்கு மாகாண ஆளுநர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றவர். 2009-12-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!