1945.10.21 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறந்த நாடகக்கலைஞன். இவரால் நடிக்கப்பட்ட நாடகங்களில் காதலா கடமையா என்ற நாடகம் இவருடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நாடகமாகும்.யதார்த்தமான முறையில் நாடகத்திற்கான காட்சிப் பின்னணிகளை அமைத்து நாடகத்தினை காத்திரமானதாக உருவாக்கும் வல்லமை இவரிடம் காணப்பட்டமையினால் இவரது நாடகங்கள் அனைத்தும் அனைவராலும் சிறப்பாகப் பேசப்பட்டமை கண்கூடு. 2005.08.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்