1919-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசைத்துறை, நாடகத்துறை ஆகியவற்றில் பெரும்புகழ் பெற்று விளங்கியவர். இலங்கை வானொலி மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் பாடியும் நடித்தும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ஈழத்து இசை நாடக வரலாற்றில் தனியிடம் பிடித்துக் கொண்டவர். ஆடல் நாடகங்களுக்குப் பின்னணிக் கலைஞனாகப் பணியாற்றியவர். வசந்தகான சபாவின் மன்ற உறுப்பினராகவும், இராஜபார்ட் நடிகராகவும் கலையுலகில் வலம் வந்தவர். வசந்தகான சபாவால் தயாரிக்கப்பட்ட இசை நாடகங்களில் நடிகமணியுடன் இணைந்து நடித்து உன்னத கலைஞனாகத் திகழ்ந்தவர். 1976-09-17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.