Saturday, April 5

குமாரசுந்தரம், பக்கிரிசாமி

0

1921-12-13 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறந்த தவில் வித்துவான். சிறுவயதில் தென்னிந்திய தவில் மேதை நாச்சியார் கோயில் இராகவப்பிள்ளை என்பவரிடம் குருகுலவாசம் செய்தவர். அங்கு பிரபல மேதைகளான நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ரீ.என்.இராயரத்தினம்பிள்ளை, காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளை, பிரபல தவில் மேதைகளான நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, திருமுல்லைவாசல் முத்துவீரபிள்ளை போன்றவர்களது குழுவில் தவிற்கலைஞனாகப் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றவர். இலங்கையில் தனது சிறிய தந்தையார் மாவை என்.எஸ்.உருத்திராபதி, சகோதரர் எஸ்.எஸ். அப்புலிங்கம் போன் றோரது குழுவிலும் தவிற்கலைஞனாகப் பங்காற்றியவர். தவில் மேதை அமரர் தெட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள முக்கிய தலங்களில் யாவற்றிலும் தவில் வாசித்த பெருமைக்குரியவர். 2004.01.17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!