1940-11-14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாiஷையூர் என்னும் இடத்தில் பிறந்தவர். பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தின் கலைவழிச் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாய் திகழ்ந்தவர். தீர்க்கசுமங்கலி, கண்டியரசன், மாணிக்கப்பரல், தங்கபுரிக் காவலன் ஆகிய இசைநாடகங்களிலும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றவர். நடிகர்களுக்கான ஒப்பனைக் கலையிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். எழுத்தாளர், பயிற்றுநர், நெறியாளர் நடிகன் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். திருமறைக் கலாமன்றத்தின் கலை நிகழ்வுகளின் பொறுப்பாளராகச் செயற்பட்டுகலைப் பணியாற்றியவர். கலைக்காக வாழ்ந்து மறைந்த இக்கலைஞனுக்கு இசையை நேசிக்கும் இதயங்களில் என்றும் இடமுண்டு. 2003-06-30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.