Sunday, March 30

வித்வ சிரோமணி, வித்யா கலாபமணி, சிவகலா பூஷணம், சம்ஸ்கிருத பண்டிதர், பிரம்மஸ்ரீ ச. பஞ்சாஷர சர்மா

0

வடகோவைச் சபாபதி நாவலர், தென்கோவை கந்தையாபிள்ளை முதலிய பேரறிஞர்களின் வரிசையில் கோப்பாய்க் கிராமம்  தமிழுலகிற்கு ஈன்றளித்த அரிய மணிகளில் ஒருவர் அமரர் பண்டிதர் பிரம்மஸ்ரீ சபாபதி ஐயர் பஞ்சாட்சர சர்மா அவர்கள்.

கோப்பாய்க் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் நீண்டகால வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயா அவர்கள் நம் தமிழ்மொழிக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் சைவ சமயத்துக்கும் தமிழ், சம்ஸ்கிருத இலக்கிய உலகிற்கும் இவை சார்ந்த வகையில் சமூகத்திற்கும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

வடகோவையில் பிரபல சித்தவைத்தியரும் மாந்திரீக நிபுணரும் புராணபடன வித்தகருமான பிரம்மஸ்ரீ கோபாலையர் சபாபதிஐயர்  அவர்களுக்கும் கந்தரோடை ஆரிய திராவிட விற்பன்னரும் புலவருமான சிவஸ்ரீ சிவப்பிரமணியக் குருக்களின் ஏகபுத்திரி மீனாட்சி அம்மாவிற்கும் மூத்த புதல்வராக 1916-11-13ஆம் நாள்  நள வருடம் ஐப்பசி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்திலே பிறந்தார்.

ஆரம்பக் கல்வியைச் சொந்த ஊரிலே ஜம்புகேஸ்வரக் குருக்கள் என்பாரின் கோவில் பாடசாலையிலும் அதையடுத்து கல்வியதிகாரி முகாந்திரம் சதாசிவ ஐயரால் நடத்தப்பட்ட சுன்னாகம் பிராசீன பாடசாலையிலும் கற்றார். இடையில் சிலகாலம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும் கல்விகற்றார். ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகளிடத்தில் வேதாத்யயனம் செய்து கொண்டார். அவரிடமே சமஸ்கிருத மொழியையும் கற்றார். பின்னர் மீண்டும் பிராசீன பாடசாலையில் சேர்ந்து தமிழில் பிரவேச பாலபண்டித பரீட்சைகளில் சித்தியெய்தி பின்னர் கோப்பாய் சரவணபவானந்த பாடசாலையில் சிரே~;; தராதரப் பரீட்சையில் சித்தியெய்தி திருநெல்வேலி மூத்ததம்பி வித்தியாசாலையில் ஆசிரிய தராதரப் பரீட்சையில் தோற்றி சித்தியெய்தினார். அங்கு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, வியாகரணசிரோமணி பிரம்மஸ்ரீ தி. கி. சீதாராம சாஸ்திரிகள் ஆகியோரிடம் கற்றார். காவிய பாடசாலையில் கற்றவரான இவர் சாஸ்திரிகளின் வழிகாட்டலில் சமஸ்கிருத பண்டிதரானார்.

ஆரியதிராவிட பா~hபிவிருத்திச்சங்க பண்டிதரான இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களை பண்டிதர் சி. கணேசையரிடம்  கைவரப்பெற்றவர். ஆங்கிலம், சிங்களம், தெலுங்கு, குஜராத்தி முதலிய மொழிகளிலும் ஓரளவு அறிவைப் பெற்று விளங்கிய இவர் மலையாளத்தில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் இருவருடங்கள் கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் பின்பு ஓய்வுபெறும்வரை புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

நீர்வேலி சோதிட, புராண வித்தகராக விளங்கிய சிவஸ்ரீ . தியாகராஜக் குருக்களின் கனிஷ் புதல்வி இராசாத்தி அம்மாவை 30 – 03 – 1945 இல் திருமணம் செய்து இனிய இல்லறத்தை நடத்தினார்.

பொறியியலாளர் நித்தியானந்த சர்மா (இப்போது சுவாமி ~ராத்மானந்தாஇராமகிருஷ்ணமடம், கொழும்பு), சௌதாமினி சாம்பசிவக் குருக்கள் (எழுத்தாளர் சௌமினி) சிவானந்த சர்மா B.A.(Hons)  (கோப்பாய் சிவம்), பிரபல சோதிடர் சோமசேகர சர்மா து.(பதுளை), அனுராதா புருஷோத்தம சர்மா . (Hons), Dip.in Music  ஆகியோர் இவர்களின் மக்கட்செல்வங்களாம்.

அமரர் பண்டிதர்பிரம்மஸ்ரீ  . பஞ்சாட்சரசர்மா அவர்களின்  முன்னோர் வரலாறு, தொடரும் ஒரு வம்சத்தின் நீண்ட வரலாறாக நோக்கப்படலாம்.

ஒருவம்சத்தினரின் பரம்பரை வரலாறு இவ்வளவு தெளிவாக நீண்ட தலைமுறைகளாக் பாதுகாக்கப்பட்டு வருவது அபூர்வமானதாகும். அதுவும், சாதாரண அந்தணர் குடும்ப வரலாறு அவ்வந்தணர்களாலேயே தொடர்ந்து ஏடுகளில் எழுதிப் பேணப்பட்டது அதிசயமானதே.

வித்துவான் எப்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் காரைநகர் மான்மியம் என்ற நூலில் இதுபற்றிய விபரம் கிடைக்கிறது. சேதுபதி மஹாராஜாவின் செப்பேடுகளின் மூலமாகவும் திருவுத்தரகோசமங்கையிலிருந்து ஈழம் வந்து காரைநகரில் குடியேறிய குருபரம்பரையினர் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்து எழுதிவந்தகாரைநகர் சிவன் கோவில் குருபரம்பரை யினரிடம் உள்ளவரலாறு கூறும் ஏட்டுப் பிரதிகள் மூலமாகவும் இவ்வரலாறு உறுதி செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் திருவுத்தரகோசமங்கையெனும் ஒரு பழம்பெரும் தலமுண்டு. அங்கே மங்களேஸ்வர சுவாமி கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில் பூஜாகாரியங் களை 32 குருக்கள் குடும்பத்தினர் வேதாகமோக்தமாக மிகவும் சிறப்புடன் நிகழ்த்திவந்தனர். அன்று அத்தேசத்துக்கு அரசனாக இருந்து இராச்சிய பரிபாலனம் செய்தவர் சோமசுந்தர சேதுபதி மகாராசா.

திருவுத்தரகோச மங்கையில் மங்களேஸ்வர சுவாமிக்குப் பூசைத் தொண்டு செய்தவர்களுள் காஞ்சிபுரம் கல்யாணசுந்தரக் குருக்களின் மகனான சிவசுப்பிரமணியக் குருக்கள் ஒருவர். ஒருநாள் இவரும் வேறுசில குருமாரும் அரசனைச் சந்திக்கச் சென்றபோது சிவசுப்பிரமணியக் குருக்கள் அரசன்மேல் சம்ஸ்கிருதக் கீர்த்தனைகள் பாடினார். பெரிதும் மகிழ்ந்த மகாராசா அவரைத் தலைமைக் குருக்களாக நியமித்தார். அவர்களின் சேவையைப் பெரிதும் மெச்சி அவர்களுக்கு அந்தக் கோவிலின் பூசை உரிமைகளைச் சூரிய சந்திரர்கள் உள்ளவரை உரிமையாக்கி அவர்கள் வாழ்வதற்குக் கிராமங்களையும் கொடுத்து இவற்றையெல்லாம் அழியாது செப்பேட்டில் எழுதிச் சாசனம் செய்துவைத்தான்.

இந்த முப்பத்திரண்டு குடும்பத்தைச் சேர்ந்த குருமாரும் இடைவிடாது பதினைந்து தலைமுறை காலமாக தம் பணிகளை நடத்திவந்தனர். இப்படியிருக்கும் நாளில் உள்நாட்டுக் கலகங்கள் தொடங்கின. வேறுவழியின்றி மங்களேஸ்வரக் குருக்களும் மனைவியும் சுந்தரேஸ்வரக் குருக்கள் என்பாரும் வேறும் இரண்டு குருமாரும் உத்தரகோச மங்கையை விட்டு நீங்கினர். இராமேஸ்வரம் வந்தடைந்து சிறிது காலம் தங்கியிருந்தனர்.

அங்கிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து அங்கே தங்கியிருந்த முத்துமாணிக்கச் செட்டியாரைச் சந்திக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்தில் குளக்கோட்டு மன்னனால் காரைநகர் வியாவிலில் கட்டிமுடிக்கப்பட்ட ஐயனார் கோவிலுக்குக் குருக்கள்மார் தேடி இந்தியாவுக்குப் பயணம் செல்லும் வழியில் இராமேஸ்வரத்தில் தங்கியிருக்கும் தமது வரலாற்றை முத்துமாணிக்கச் செட்டியார் மங்களேஸ்வரக் குருக்களுக்குக் கூறினார். திருவுத்தரகோசமங்கையில் நிகழ்ந்த அனர்த்தத்தையும் தமது துன்ப வரலாற்றையும் குருக்கள் செட்டியாருக்குக் கூறினார்.

இறைவன் திருவுள்ளம் இதுபோலும் எனவுணர்ந்து செட்டியார் வருந்தியழைக்கக் குருக்களும் இசைந்து காரைநகருக்கு வந்து வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேகத்தை நிறைவேற்றி நித்திய நைமித்திகங் களைச் செய்துவரலானார்.

இந்த மங்களேஸ்வரக் குருக்களே பஞ்சாட்சர சர்மாவின் முற்சந்ததியினரில் முதன்முதலில் ஈழத்துக்கு வந்தவராவார். இந்த மங்களேஸ்வரக் குருக்களின் பரம்பரையில் ஐந்தாவது தலைமுறையில் மூத்தவர் கண்டோபண்டித ஐயர் காரைநகரிலேயே இருக்க அவரது சகோதரர்கள் நால்வரும் முறையே புங்குடுதீவு, சுன்னாகம் (மயிலணி), அராலி, இணுவில் ஆகிய இடங்களுக்குப் போய்க் குடியேறினர்சுப்பிரமணியக் குருக்கள் என்பாரே சுன்னாகம் மயிலணியில் குடியேறியவர்.                                                                                    

இவரது மகன் கார்த்திகேயக் குருக்கள். இவரது மகன் கோபால ஐயர். இவரது மகன் சபாபதி ஐயர். இவரது மகன் பஞ்சாட்சர சர்மா.

பஞ்சாட்சர சர்மா 27 வயதிலிருந்தே ஒரு சிறந்த வாசகராகவும் எழுத்தாளராகவும் முகிழ்த்தார். கலாமோகினி, வீரசக்தி, ஈழகேசரி, மறுமலர்ச்சி, கலைச்செல்வி, சோதிடமலர், அம்புஜம், அருவி, நாவலர் குரல், இலங்கை விகடன், காந்தீயம், இந்துசாதனம், ஈழநாடு, சுதேசநாட்டியம் முதலிய தமிழக, ஈழத்துப் பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் . . சர்மாவின் பல்துறை ஆக்கங்கள் வெளிவந்தன. மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான சர்மா அவர்கள் அப்பத்திரிகையின் ஆசிரியபீடத்தையும் அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வானொலியில் சைவநற்சிந்தனைகளையும் இலக்கியப் பேச்சுக்களையும் வழங்கியிருக் கிறார். பல்வேறு காலங்களில் வெளிவந்த பல பாராட்டுவிழா மலர்களின் தொகுப்பாசிரியராகவும் பல சிறந்த நூல்களின் பதிப்பாசிரியராகவும் விளங்கியதோடு பல நூல்களுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துமிருக்கிறார். இவர் ஓர் ஆசிரியர் என்பதற்கிணங்கப் பல பாடநூல்களையும் உரைவிளக்க நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

எலிக்குஞ்சுச் செட்டியார் என்னும் இவரது சிறுவர் கதை இலங்கை அரசாங்க கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் ஏழாம் ஆண்டுத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 சம்ஸ்கிருதக் கல்வியை வளர்ப்பதற்காகப் பல இடங்களிலும் சம்ஸ்கிருத வகுப்புக்கள், பரீட்சைகள் முதலியவற்றை நடத்தியிருக்கிறார். இந்தியாவிலே புகழுடன் விளங்கும் பாரதீய வித்யா பவன், அமரபாரதீ பரீ~h சமிதி ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து அவர்களது பாடத் திட்டத்திற்கமைவாகக் கற்பித்து அந்தப் பரீட்சைகளை இங்குள்ள மாணவர்களுக்கு நடத்தி அரிய சான்றிதழ்களை அங்கிருந்தே பெற்றுக் கொடுத்தவர்.

சமயம், இலக்கியம், சமூகம்  எனப் பல்துறை சார்ந்த சங்கங்கள் பலவற்றில் முக்கிய உறுப்பினராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவருடைய பங்களிப்பைப் பெற்ற 42 நிறுவனங்களின் பெயர்களும் இவரது ஆக்க இலக்கியங்கள் என 56 படைப்புக்களும் பதிப்பித்த அல்லது தொகுத்த நூல்கள் என 06 நூல்களும் உரைவிளக்கம் செய்தவை என 05 நூல்களும் அணிந்துரை வழங்கியவை என 04 நூல்களும் மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கியவை என 12 நூல்களும் பரீட்சைப் பங்களிப்புக்கள் என எட்டுவிதமான பரீட்சைகளும் புள்ளிவிபரமாக மறுமலர்ச்சி கண்ட மாணிக்கம் என்ற நூலில் தரப்பட்டுள்ளமை சமூகமட்டத்தில் இவர் வழங்கிய காத்திரமான பங்களிப்புப் பற்றி அறிய உதவுகின்றன.

பிறருக்கு உதவுதல், படிக்கவரும் மாணவர்களின் பசி, களையைப் போக்குவதிலும் முனைந்து நிற்றல், கடைசிக் காலம்வரை தாம் பல விடயங்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தமை, பல்துறைசார்ந்த விடயங்களைக் கடைசிக் காலம்வரை தேடித்தேடி வாசித்தமை, தாம் கண்டறிந்த புதிய விடயங்களைத் தம்மைச் சார்ந்தவர் களுக்குச் சுவைபட எடுத்துக் கூறுதல், மாணவர்களுகளுக்கு எந்த விடயத்தையும் தெளிவுற விளக்குதல், யாருடனும் தேவையற்ற முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் நட்புநிலை பேணுதல் என்பவை என்றும் அவரிடம் காணப்பட்ட பண்புநலன்கள்.

ஓய்வுக் காலத்திலும் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு, பல இடங்களிலும் தமிழ், சம்ஸ்கிருத வகுப்புக்களும் நடத்திக்கொண்டு இருந்தவர், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து வன்னியில் மகளுடனும் பின்னர் பதுளையில் தமது இளைய மகனுடனும் வாழ்ந்து அங்கேயே 2003-09-24 இல் இறைபதமடைந்தார்.

 ஆக்க முயற்சிகள்

இலக்கியம்

  1. வசனகவிதை கலாமோகினி 1943-12-15
  2. கண்ணீர்த்துளிகள் மறுமலர்ச்சி 1945 ஓகஸ்ட்
  3. கிராமக்கதைகள் மறுமலர்ச்சி 1946 மார்ச்
  4. முல்லைக்காட்சி மறுமலர்ச்சி 1946 ஏப்ரல்
  5. தாலாட்டும் ஒப்பாரியும் மறுமலர்ச்சி 1946 யூன்
  6. கற்பனையும் பாரதியும் மறுமலர்ச்சி 1946 நவம்
  7. முத்தொள்ளாயிரக் காதல் மறுமலர்ச்சி 1947 ஜனவரி
  8. புத்தரின் தந்தம் மறுமலர்ச்சி 1948 மார்ச்
  9. முத்தொள்ளாயிரம்        மறுமலர்ச்சி 1948 ஏப்ரல்யூன்
  10. இலக்கியத்தில் காகம் இலங்கை வானொலிப் பேச்சு 1951-12-23
  11. செல்வியில் ஒரு செவ்வி ஆனந்தன் 1953 செப்
  12. ஈழநாட்டில் தமிழ்க்கவிதை வளர்ச்சி இலங்கை வானொலிப் பேச்சு 1956-8-19
  13. இலக்கியக் கழகமும் தமிழ் வளர்ச்சியும் கலைச்செல்வி  1958- செப்           
  14. சொற்சிலம்பம் அம்புஜம் 1968
  15. வீட்டுக்கு முன்னே தற்கொலை அம்புஜம் 1970 ஏப்ரல்
  16. விபுலானந்தக் கவிஞன் இசையருவி 1970
  17. கற்பனையா மெய்ப்பொருளா அருவி 1984
  18. பண்டிதமணி அவர்களும் ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கமும்         

   பண்டிதமணி நினைவுமலர்

  1. தமிழ்மொழியில் தவறு செய்யலாமா? தொடர்கட்டுரை விவிதவித்யா 2002-2004
  2. முந்நூறு தமிழ்விருத்தங்களில் முழுராமாயணம். விவிதவித்யா -1 – 2002
  3. அஷ்டப் பிரகரணம் விவிதவித்யா 2 – 2002
  4. சுவாமி விவேகானந்தரின் பேச்சைக் குழப்பிய பேரினவாதிகள் விவிதவித்யா – 3 – 2003
  5. வடமொழித் தனிப்பாடல்கள் விவிதவித்யா – 5 – 2003

 மொழியும் இலக்கணமும்

  1. வடமொழியும் வள்ளத்தோளும்    ஈழகேசரி 1944
  2. தமிழில் என்ன இருக்கிறது நவசக்தி 1945 பெப்ரவரி      
  3. மானும் மதியும்         மறுமலர்ச்சி 1946 செப் 
  4. தமிழ் மொழியும் ரோமன் லிபியும் மறுமலர்ச்சி 1946 செப்     
  5. தமிழுக்கு ரோம லிபி       மறுமலர்ச்சி 1946 ஒக்
  6. இலக்கண மாறுபாடு மறுமலர்ச்சி 1947 யூன், செப்.. ஒக்..
  7. மாறும் இலக்கணம்         மறுமலர்ச்சி1947நவம்1948ஜனவரி,பெப்ரவரி
  8. எதற்காக       காந்தீயம் 1950-07-04
  9. கொம்பு கால் இல்லாக் கவி          சோதிடமலர் 1979  ஏப், மே, யூலை
  10. மணிப்பிரவாள சதகம் சோதிட மலர் 1980 ஏப்ரல், மே
  11. நாவலர் வழி      நாவலர் மலர் 1986  

சமயம்

  1. புராணம் காட்டும் வாழ்க்கை நெறி இலங்கை வானொலிப்  பேச்சு 1969-08-14
  2. வேதநெறியும் சைவத்துறையும் இலங்கை வானொலிப் பேச்சு 1974-04-05
  3. பங்குனி உத்திரம் சைவநற்சிந்தனை 1974-04-06 
  4. பக்தி சைவநற்சிந்தனை 1974-04-07
  5. நல்லைக்கு வந்த முருகன் நாவலர் குரல் 1986-04-01
  6. கும்பாபிஷேகம்              கோப்பாய் கண்ணகி  அம்மன்மலர் 1986 
  7. தமிழாகமம் கிளிநொச்சி கந்தன் கருணை மலர் 
  8. சிவாகமப்பாதுகாப்பு

சிறுவர் இலக்கியம்

  1. எலிக்குஞ்சுச் செட்டியார்    மறுமலர்ச்சி 1946 மார்ச்
  2. என்ன வேண்டும்   மறுமலர்ச்சி 1946 யூன்
  3. தெரிந்தால் சொல்லுங்கள் மறுமலர்ச்சி 1946 யூலை 
  4. பூமி சுழல்கிறதே   அம்புஜம் 1969 ஏப்ரல் 

நூல் விமர்சனம்

  1. நளோபாக்கியானமும்ஹிதோபதேசமும் ஈழநாடு1962-03-25
  2. வடமொழி இலக்கிய வரலாறு கலைச்செல்வி 1963 செப் 
  3. கணேச பஞ்சரத்தினம் ஈழநாடு
  4. அக்னி காரியம் இந்து சாதனம்

 புனை கதை

  1. கீத நாதம்    மறுமலர்ச்சி 1945 செப் 

 பல்துறை ஆக்கம்

  1. மறுமலர்ச்சி ஆண்டறிக்கை சுதேச நாட்டியம் 1944-12-17
  2. அகமும் முகமும் பேட்டி சோ. சுப்பிரமணியக்குருக்கள் பாராட்டுவிழா மலர் 1967  

 மொழிபெயர்ப்பு

  1. படித்துறை சொன்ன பழங்கதை இலங்கைவிகடன் –     1939
  2. இளங்கோவடிகள் சமஸ்கிருதக்கட்டுரை – 1940
  3. கனவுலகம் ஜமலையாளச் சிறுகதை     – ஈழகேசரி 1944-03-12,19   
  4. வாக்குறுதிவீரசக்தி 1944-90-01
  5. வனதேவதை            மறுமலர்ச்சி 1947 மே 
  6. மூலங்களும் மொழிபெயர்ப்புக்களும் –    இலங்கை வானொலிப்பேச்சு 1952-03-02  
  7. காற்றே வா ஜமலையாளக்கவிதை –    அம்புஜம் 1970
  8. ஆஸ்ரமத்துச் சிறுவர்கள் சமஸ்கிருத நாடகத்தில் ஒரு காட்சிஅம்புஜம் 1971

 பதிப்பித்து வெளியிட்ட நூல்களும், ஆசிரியராயிருந்து தொகுத்து வெளியிட்ட மலர்களும்

  1. அச்சுவேலி குமாரசாமிக்குருக்கள் பாராட்டுவிழாமலர் – 1960
  2. சிவானந்தலகரி மூல சுலோகங்களும், மொழிபெயர்ப்புச் செய்யுள்களும், பொழிப்புரை, குறிப்புரைகளும்அமர பாரதி பரீட்சா சமிதி வெளியீடு – 1968       
  1. இலக்குமி தோத்திரம் செய்யுள் மொழி பெயர்ப்புஅமரபாரதி பரீட்சாசமிதி வெளியீடு 1971    இவ்விரு நூல்களையும் இயற்றியவர் பண்டிதர் . சுப்பிரமணியம் 
  1. வடகோவை, சித்தாந்த பாநு, சோ. சுப்பிரமணியக்குருக்கள் பாராட்டுவிழா மலர் – 1971
  2. வடகோவை சித்திர வேலர் ஊஞ்சற் பதிகம் – 1971
  3. வியாகரண சிரோன்மணி தி. கி. சீதாராமசாஸ்திரிகள் மணி விழா மலர் – 1971

 

அணிந்துரை அறிமுகவுரை வழங்கிய நூல்கள்

  1. ஆறுமாமுகன் அருட்பேராயிரம் சுப்பிரமணிய சஹஸ்ரநாம ஸ்தோத்திர மொழிபெயர்ப்பு  ஆசிரியர் பண்டிதர் . சுப்பிரமணியம்            – 1983
  1. சைவத் திருமணநடைமுறைகள் ஆசிரியர் வி. பொ. வீரசிங்கம் – 1985
  2. சௌந்தர்யலகரி செய்யுள் மொழிபெயர்ப்பு ஆசிரியர் பண்டிதர் . சுப்பிரமணியம் – 1986
  3. குமாரசம்பவம் செய்யுள் மொழிபெயர்ப்பு ஆசிரியர் பண்டிதர் . சுப்பிமணியம்

உரை விளக்கம் செய்த நூல்கள்

  1. சைவசமயப் பாடத்திரட்டு 12 பதிப்புகள் வரதர் வெளியீடு – 1950
  2. இலக்கிய வழி (பண்டிதமணி) வரதர் வெளியீடு – 1955
  3. கும்பகர்ணன் வதைப்படலம் பண்டிதர் . சுப்பிரமணியவர்களுடன் உரைஆசிரியராக  வரதர் வெளியீடு – 1956  
  1. கந்த புராண நவநீதம் காசிவாசி சி. செந்திநாதையர் கூட்டுறவு .நூ. பதிப்பகம் – 1969
  2. சைவசமய நெறி ஜசைவபரிபாலன சபைஸ இரண்டாம் பாகம் – 1973

 மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய நூல்கள்

  1. நளோபாக்கியானம், இதோபதேசம்வியாகரண சிரோன்மணி பூ. தியாகராஜ ஐயர் B.A.[Hons] 1961
  2. பாரதியாரின் பாஞ்சாலி சபதம் பண்டிதர் வீ. சீ. கந்தையா – 1963
  3. சாவித்திரியுபாக்கியானம்பூ. தியாகராஜ ஐயர்B.A.- 1964
  4. விபுலானந்தக் கவிமலர் மாலைஅருள் செல்வநாயகம் – 1965
  5. விபுலானந்த ஆராய்வு விளக்கம்பண்டிதர் வீ. சீ. கந்தையா 1965
  6. பஞ்சதந்திரம்லப்தப்பிரணாசம்பூ. தியாகராஜ ஐயர் B.A– 1965
  7. நீதி சதகம்பூ. தியாகராஜ ஐயர் B.A. – 1968
  8. இலக்குமி ஸ்துதி மாலாபூ. தியாகராஜ ஐயர் B.A. – 1973
  9. விக்னேஸ்வர ஸ்நபன கும்ப பூஜாவிதிபூ. தியாகராஜ ஐயர் B.A. – 1978
  10. கணேச பஞ்சரத்தினம் ஜசெய்யுள் மொழிபெயர்ப்புடன் பூ. தியாகராஜ ஐயர் B.A – 1981
  11. ண்முக சூட்கம்பூ. தியாகராஜ ஐயர் B.A. – 1981
  12. சௌந்தர்யலகரி தமிழ்ச் செய்யுள் மொழிபெயர்ப்புடன் பண்டிதர் . சுப்பிரமணியம் – 1986

 பங்களிப்புகள்

பரீட்சைப் பங்களிப்புகள்

  1. யாழ் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் தமிழ் சமஸ்கிருதப் பரீட்சைகள் 
  1. கொழும்பு விவேகானந்த சபைசமய பாடப்பரீட்சை
  2. சைவ பரிபாலன சபைசமய பாடப்பரீட்சை
  3. பம்பாய் பாரதீய வித்யா பவனம்சமஸ்கிருதப் பரீட்சை
  4. சென்னை அமர பாரதி பரீட்சா சமிதிசமஸ்கிருதப் பரீட்சை
  5. சிவப்பிராமண சங்கம்சிவாசாரிய பரீட்சை
  6. சிவானந்த குருகுலம்சிவாசாரிய பரீட்சை
  7. வட இலங்கை ஆசிரியர் சங்கம்,

  சமஸ்கிருத, சமய பாடப்பரீட்சைகள்

சங்கங்கள் சபைகளில் வகித்த பதவிகள

  1. யாழ்ப்பாணம் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்தலைவர்
  2. வலிவடக்கு சைவசமய பாட அபிவிருத்திக் கழகம்தலைவர்
  3. யாழ்ப்பாணம் சிவானந்த குருகுல பரிபாலன சபைஆரம்ப கால தலைவர்
  4. கோப்பாய் மத்தி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் திருப்பணிச்சபைதலைவர்
  5. கோப்பாய் வடக்கு ஞானபண்டித சைவவிருத்திச் சங்கம்தலைவர்
  6. வட கோவை கலாமன்றம்தலைவர்
  7. கோப்பாய் வடக்கு சனசமூக நிலையம்தலைவர்
  8. சித்தாந்த பாநுசோ. சுப்பிரமணியக்குருக்கள் பாராட்டு விழாச்சபைஉப தலைவர்
  9. சபாபதி நாவலர் ஞாபகார்த்த விழாச்சபைஉப தலைவர்
  10. யாழ்ப்பாணம் சிவானந்தகுருகுல பரிபாலனசபைஉப தலைவர்
  11. கோப்பாய் கிறிஸ்தவகல்லூரிப் பெற்றோர் ஆசிரியர் சங்கம்உப தலைவர்
  12. யாழ்ப்பாணம் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்காரியதரிசி
  13. யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாவிருத்திச்சங்கம்பரீட்சைக்காரியதரிசி
  14. பம்பாய் பாரதீய வித்யாபவனத்திலுள்ள சமஸ்கிருதவிஸ்வபரிசத் இலங்கைக் கிளை  காரியதரிசி
  1. சென்னை அமர பாரதி பரீட்சா சமிதிஇலங்கைக் கிளைகாரியதரிசி
  2. அச்சுவேலி . குமாரசாமிக்குருக்கள் பாராட்டு விழாச் சபைகாரியதரிசி
  3. கோப்பாய் வடக்கு சனசமூக நிலையம்காரியதரிசி
  4. அகில இலங்கை சிவப்பிராமணர் சங்கம் கோப்பாய், நீர்வேலிகிளைச் செயலாளர்
  5. கோப்பாய் வடக்கு ஞானபண்டிதசைவவிருத்திச்சங்கம்போஷகர்
  6. யாழ்ப்பாணம் சிவானந்த குருகுல பரிபாலனசபைபதிவாளர்
  7. யாழ்ப்பாணம் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச்சங்கம்இணையாசிரியர்
  8. வியாகரண சிரோன்மணி தி. . சீதாராமசாஸ்திரிகள் மணிவிழாச்சபைமலராசிரியர்
  9. சித்தாந்த பாநு சோ. சுப்பிரமணியக்குருக்கள் பாராட்டுவிழாச்சபைமலராசிரியர்
  10. சபாபதி நாவலர் ஞாபகார்த்த விழாச்சபைமலராசிரியர்
  11. யாழ்ப்பாணம் தமிழ்எழுத்தாளர் சங்கம்செயற்குழு உறுப்பினர்
  12. யாழ்ப்பாணம் முத்தமிழ் மன்றம்செயற்குழு உறுப்பினர்
  13. வட இலங்கை சமஸ்கிருத சங்கம்செயற்குழு உறுப்பினர்
  14. கலாசார அமைச்சுஇந்துமத ஆலோசனைச் சபை உறுப்பினர்
  15. அகில இலங்கை இந்து மாமன்றம்செயற்குழு உறுப்பினர்
  16. கலாநிதி கா. கைலாசநாதக்குருக்கள் மணிவிழாச்சபை செயற்குழு உறுப்பினர்
  17. வித்துவான் கி. வா. ஜகந்நாதன் மணிவிழாச்சபைசெயற்குழு உறுப்பினர்
  18. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் வரவேற்பு விழாச்சபைசெயற்குழு உறுப்பினர்
  19. வித்துவான் . சுப்பையாபிள்ளை வரவேற்பு விழாச்சபைசெயற்குழு உறுப்பினர்
  20. கீழ்நாட்டு மொழிப் பட்டதாரிகள் சங்கம்செயற்குழு உறுப்பினர்
  21. அகில இலங்கை பண்டித பட்டதாரிகள் சங்கம்செயற்குழு உறுப்பினர்
  22. யாழ்ப்பாணப்பகுதித் தமிழாசிரியர்சங்கம்செயற்குழு உறுப்பினர்
  23. வடமாகாண சமஸ்கிருத ஆசிரியர்சங்கம்செயற்குழு உறுப்பினர்
  24. யாழ்ப்பாணம் சிவானந்த குருகுல பரிபாலன சபைவித்வத்சபை உறுப்பினர்
  25. முனீஸ்வரம் விஸ்வ வித்யா பீடம்செயற்குழு உறுப்பினர்
  26. பிராமண சமாஜம்செயற்குழு உறுப்பினர்
  27. அகில பிராமணகுரு சமூகசேவாசங்கம்செயற்குழு உறுப்பினர்
  28. 42. வட கோவை வாலிபர் சங்கம் – செயற்குழு உறுப்பினர் 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!