அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையில் அமைந் துள்ள இவ்வாலயம் மாருதப் புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் ஆனி மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.