1869-09-13 ஆம் நாள் வட்டுக்கோட்டை – சிந்துபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர்.இலங்கையின் இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும்,அவற்றின் தத்துவங்களையும் நன்கறிந்த தமிழ் மகன். சிறுவர்க்கேற்ற இனிய பாடல்களை இயற்றுவதில் வல்லவர்.பாவலன் பாரதி, சீதனச் சிந்து, பொன் பெற்றதுறவி, அவரது கவிதைகளிற் சிலவாகும். இலங்கை சுதந்திரமடைந்த தினத்தினையொட்டி 1948 இல் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம் பரிசினை பெற்றுக்கொண்டவர். இலங்கை யின் தேசிய கீதத்தினை தமிழில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர். 1951-05-08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.