இக்கோயிலின் பூர்வீக வரலாறு பற்றிமுழுமையாக அறியமுடியாதிருக்கின்றது.ஆயினும் 1872 ஆம் ஆண்டுக்கு முன்னர்கோயிலடி என்னும் காணியில் எழுந்தருளியுள்ள ஆலயத்தின் பராமரிப்பாளராக சோமசுந்தரம் கணபதிநாதக்குருக்கள் ஆலயத்தின் தர்மகர்த்தா எனப் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதனால் இவரின் வழிவந்தோரே இவ்வாலயத்தின் பரம்பரையினராகக் கொள்ளமுடியும். ஒவ்வொரு வருடத்திலும் வைகாசி மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.