Monday, October 13

காசி விநாயகர் கோயில் – தெல்லிப்பளை

0

காசிக்கு தல யாத்திரை சென்ற பெண்மணிஒருவர் தனது யாத்திரையினை நிறைவேற்றிவிட்டுத் திரும்புகின்ற பொழுது காசியிலிருந்தவிநாயகருடைய விக்கிரகம் ஒன்றினைத்தம்முடன் கொண்டு வந்து வீணாக்கடவை என அழைக்கப்படும் தற்பொழுது கோவில் அமைந்திருக்கும் பகுதியில் வைத்துமுப்போதும் பூசைவழிபாடுகளைச் செய்து வந்தார். காலப்போக்கில்இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் பங்களிப்போடுகோயில் இன்றைய வளர்ச்சியைக் கண்டதெனலாம். மேற்கு நோக்கிய வாசலைக் கொண்டதாக இவ்வாலயம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண குடாநாட்டில் வடக்கில்; உள்ள சைவபாரம்பரியம் மிக்க ஊரான தெல்லிப்பழையில் வீணாக்கடவைப் பதியிலே கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவர்தான் காசிவிநாயகர்இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு  முன் இவ்வாலயம் உருவாக்கப்பட்டமை பெரியோர்களின் வழி அறியப்பட்ட நிகழ்வாகும்  ஆன்ம கோடிகளுக்கு முக்தி நல்கும் அற்புத திருத்தலமாகிய காசியிலிருந்து  சிற்பியால் செதுக்கப்படாத  சிவலிங்கம் போன்ற அற்புதக்கருங்கல் கொண்டு வரப்பட்டு;ள்ளது. உற்று அவதானித்தால் அதில் இயற்கையாக அமைந்த விநாயகர் உருவத்தை காணமுடியும.; அந்த அருள்மிகு சிவலிங்கம்  வீணாக்கடவைப் பதியில் நின்ற விருட்சம் ஒன்றின் கீழ் வைத்து வழியாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்காரணத்தினாலேயே காசிவிநாயகர் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

முதலில் கிழக்குத் திசையை நோக்கியபடியே விருட்சத்தின் கீழ் எளிமையான ஆலயமாக விநாயகரை வழிபட்டனர். பின்னர் அவனருளால் காசிவிநாயகர் கோயில் என திருத்தலம் அமைக்கப்பட்ட போது மேற்கு வாசலைக் கொண்டதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

பிரம்மஸ்ரீ மு. சிவகடாட்சரக்குருக்கள் தலைமையில் விசேட பூசைகள் இடம்பெற்றன. அவரின் ஏக புதல்வனான .பிரம்மஸ்ரீ. சிவகடாட்சரக்குருக்கள் கணேசலிங்க குருக்கள் அவர்கள் கோவிலை சிறப்பாக பரிபாலித்தார்.

இரண்டாவது கும்பாபிஷேகம் 1943- 45 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததாக அறியமுடிகிறதுஇதன்மேல் கட்டிடங்கள் பழுதடைந்து திருப்பணி வேலைகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சிறிது காலம் மண்;டபங்கள் யாவும் சீரற்ற நிலையிலேயே காணப்பட்டது. இதனைக் கண்ணுற்ற தெல்லி வாழ். சைவ மக்கள் திருப்பணிகளை நிறைவு செய்வதற்கு முன் வந்தார்கள். 1968 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுத் திருப்பணி வேலைகள் ஆரம்பமாயின. ஆலயத்துடன் நெருங்கிய தொடர்புடைய பலர் பெருநிதியங்களை வழங்கினார்கள். இதனால் திருப்பணி வேலைகள் விரைவாக நடைபெற்றன. முக்கியமான கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 15.09.1971 இல் சிறப்பான முறையில் மூன்றாவது மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஒன்பது குருமார்கள் பங்குகொண்டு பஞ்சகுண்டம் அமைத்து, கும்பாபிஷேகத்தை உன்னதமாக நடத்தினார்கள்.

இதன் மேல் 19.04.1973இல் முதலாவது கொடியேற்றம் நடாத்தப்பட்டது. இதன் பின்னரும் தொடர்ச்சியாக திருப்பணிகள் பல நடைபெற்று வந்தன. அடியார்கள் பொது உபயங்களாகவும், தனிப்பட்ட உபயங்களாகவும் நிதியம் வழங்கிப், பல கட்டிடங்களை நிறைவு செய்தார்கள். அடியார்களின் நன்கொடைகளைக் கொண்டு தொண்ணூறாம் ஆண்டு பிற்பகுதியில் திருப்பணி வேலைகளின் பெரும்பகுதி பூர்த்தியாகியுள்ளன. ஆலயத்தின் வடக்கு வீதியிலே சென்ற நதறபத்தைந்து ஆண்டு காலமாகச் சமயத்துறைக்கும், இசைத்துறைக்கும் அருஞ்சேவை புரிந்து வரும் பாலர் ஞானேதய சபையி;ன் ஆரம்பகால மாணவர் பலர் இக்கைங்கரியங்களுக்கு உதவியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும், பல அடியார்கள் இன்றும் ஆலயத்துக்குத் தேவையான உபகரணஙகளை வாங்கி உபயங்களாகக் கொடுத்து வருகின்றார்கள்.

3.06.1987இல் (புதிதாக உருவாக்கப்பட்ட) பஞ்சமுக விநாயகருக்குப் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது அமரர் திரு .வைரவப்பிள்ளை அவர்களின் உபயம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தில் பஞ்சமுக விநாயகரைத் தவிர ஒருமுகவிநாயகர் ஒன்றும் மூலமூர்த்தி, காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட இலிங்கம், மஹாவிஷ்ணு, ஸ்தம்பப்பிள்ளையார், மூஷிகம், பலிபீடம், நாகதம்பிரான், வைரவர், தாமிரத்தாலான சண்டேசுரர், கருங்கல்லினாலான சண்டேஸ்வரர் முதலாய மூர்த்திகள் தற்பொழுது இருக்கின்றன. சிவனருள் பெற்ற நான்கு நாயன்மார்களது சிலைகளும் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன.இவை பக்த முக்தி பாவனோற்சவத்தில்  பக்தர்களுக்கு அளவற்ற திருவருள் பாலிப்பவை. அத்துடன் தனிக்குதிரை, இரட்டைக்குதிரை, எலி, இடபம் முதலான வாகனங்களும் இரண்டு சகடைகளும் அடியார்களின் உபயங்களாக வழங்கப்பட்டுள்ளன. இவையாவும், தற்பொழுது பாவனையில் உள்ளன.

வருடாந்த உற்சவம் சித்திரை சதய நட்சத்திரத்திலன்று தீர்த்தம் வரக்கூடியதாக இடம்பெறும். ஐந்தாம் நாள் உற்சவம் பக்தமுக்தி பாவனோற்சவம், தொடங்கி  வசந்தோற்சவம், தைலாப்பியங்கோற்சவம், கிருஷ்ணகந்தலேபனம், வேட்டைத்திருவிழா சப்பர திருவிழா தோர்த் திருவிழா தீர்த்தத் திருவிழா முதலாய நிகழ்வுகள் இடம்பெறும். மாதந்தோறும் பூர்வபட்ச சதுர்த்தி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, விநாயகர் சஷ்டி, தைப்பொங்கல் , தைப்பூசம், நான்கு நாயன்மாரது குருபூசைகள் ஆகியவை சிறந்த முறையில் கொண்டாடப்படும். ஆவணிமாதத்தில் பூச நட்சத்திரத்திலன்று மணவாளக் கோல உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

You tube

1.    Kasi Viyakar kovil Bell prayer 20 12 2020 Venilaan                கோவில் மணி                     https://youtu.be/8Cl0QasiQJY?si=KxPrysjTfBl-BE7a

2a    Kasi Vinayakar Kovil ,Panchamuka vinayakar Telleppalai Jaffna Srilanka 3 6 1987 part 1     V.Venilaan   

https://youtu.be/SYwAOMMnQm0?si=SkWrVPKT3OuvOEX-

  2 b    Kasi Vinyakar kovil Panchamuka vinayakar part  2                                                     https://youtu.be/WpTEYOYuHUk?si=KVoE3cpc222cAgU_

  வை.வேனிலான்  (“பாலர் ஞானோதய சபை” முன்னாள் மாணவன்)

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!