Saturday, April 5

பரராஜசிங்கம் , கனகரத்தினம் (துருவன்)

0

1943-11-22 ஆம்நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்ற இடத்தில் பிறந்த இவர் இலங்கை நிர்வாகசேவை அதிகாரியாகவிருந்து மிக இளம் வயதிலே அமரத்துவமடைந்த துருவன் என்ற புனைபெயருடையஇவர் செங்குந்தா இந்துக் கல்லூரியில் கற்றவர், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியலில் சிறப்புப்பட்டம் பெற்றவர். கலைச்செல்வி சஞ்சிகையின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது தந்தையார் நகைச்சுவை நாடகங்களில் நடித்து பபூன் சின்னத்துரை என்றழைக்கப்பட்டவர். அவர் வழியில் இவரும் நாடக எழுத்தாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கியவர். நகைச்சுவை ஆக்கங்களைப் படைப்பதிலும் வல்லவராக இவர் விளங்கினார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து முகிழ்த்த பிரபல படைப்பாளிகளான செங்கைஆழியான், செம்பியன் செல்வன், குந்தவை, அங்கையன், செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன், சிதம்பரபத்தினி முதலானவர்களின் சமகால பல்கலை மாணவர்களில் பரராஜசிங்கமும் ஒருவராவார். பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் அவரது மறைவின் பின்னர் இவரது துணைவியாரால் மணிவிழா மலராக நூலுருவாக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 1989-04-07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

இப்பகுதியை முழுமையாக்குங்கள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!