ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதெனக்கருதப்படும் இவ்வாலயம் தென்னிந்தியாவிலிருந்து வருகைதந்த செட்டி வம்சத்தைச் சார்ந்தசிதம்பரநாத முதலியார் என்பவர் வேலணையில் குடியேறியபோது இலந்தை மரங்களால்சூழ்ந்திருந்த காணியினைத் துப்பரவு செய்தவேளை இலந்தை மரத்தின் கீழ் சிறிய விநாயகர் உருவம் காணப்பட்டதாகவும் அத்திருவுருவத்தினை சிறுகொட்டிலமைத்து வழிபட்டு வந்ததாகவும் அதனுடைய தொடர்ச்சியாக ஊர்மக்களின் பங்களிப்போடு இன்றைய நிலையினை இவ்வாலயம் பெற்றது என வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன.