20 அடி கொண்ட சிறு கொட்டிலாக இருந்த இவ்வாலயத்தினை எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் பொறுப்பெடுத்து சிறுகொட்டிலாக இருந்த ஆலயத்தினை புதிதாகக் கட்டுவதற்கு 1972 ஆம் ஆண்டு யாழ்.மறை மாவட்ட ஆயரான கலாநிதி எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையிடம் அனுமதி பெற்று ரூபா ஐயாயிரத்துடன்கட்டடப் பணிகளை ஆரம்பித்து எழுபத்தையாயிரம் ரூபாவில் ஆலயம் கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ். மறை மாவட்ட துணை ஆயர் எல்.ஆர்.அன்ரனி ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது. இக்காலத்தில் இவ்வாலயம் 12 குடும்பங்களுடன் ஒரு பங்கு ஆலயமாகத் திகழ்ந்தது. மானிப்பாய் பங்கில் பத்து ஆலயங்களுக்கான யாத்திரைத் தலமாக உருவாக்கப்பட்டது. அதிகளவான இந்துமதமக்களாலும் தரிசிக்கப்படும் இவ்வாலய திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 13 ஆம் திகதிக்குப் பின்னர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது.