Saturday, April 5

சின்னத்துரை சுவாமிகள்

0

இணுவிலில் சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் இணுவில் மேற்குப் பகுதியில் திருமணமாகி வாழ்ந்த காலத்தில் தன்னிலை மறந்தவராக வீட்டிலிருந்து வெளியேறி ஆத்மஞானத்தினை தனது வழியில் தேடலானார். இவர் எப்பொழுதும் இணுவிலின் மிக்லோட் வைத்தியசாலை அமைந்திருக்கும் வீதியில் உள்ள பரமலிங்கம் கடைக்கு முன்னாலுள்ள பஸ்தரிப்பிடத்தில் தங்கியிருப்பார்.இவருடைய போக்கு காண்போரை விசரர் என்று பார்க்கும் வகையிலேயே காணப்பட்டது. ஆனால் அவருக்குள் இருந்த இறை ஞானத்தினை யாரும் உணரவில்லை. இணுவிலில் தான் விரும்பிய இல்லத்திற்கு நடுநிசி பன்னிரண்டு மணிக்குச் சென்று பசிக்கு உணவு தருமாறு கோருவார். அதனைப் பெற்றுக் கொண்ட சுவாமிகள் உனது வீட்டில் குழந்தை வரப்போகின்றது, திருமணம் நடக்கப்போகின்றது, நோய்வரப்போகின்றது என்று சொல்லி விட்டுத் திரும்புவார். இந்நிலை அவரின் ஞானத்தினை எடுத்தியம்புகின்றது. இவரை நன்குணர்நது ஆதரித்த இணுவில் பெரியண்ணா தான் மன்னாரில் ஆசிரியராகப் பணியாற்றிய இடத்திற்கு வந்து உணவருந்திய வேளையில் கடையிலிருந்த எலும்புகளை வாங்கி அதனை அப்படியே விழுங்கினார் என்றும் மறுநாள் அவரைக் காணாது தேடிய வேளையில் அவர் இணுவிலில் நடமாடுவதாகவும் தெரியவந்தது என அவருடைய அற்புதங்களை சொல்லி மெய்சிலிர்த்து நின்றார். சித்து நிலையில் மலம்.சலம் வெளியேற்றாமல் வாழ்ந்தவர். இவர் சமாதியடைந்தபோது இளைஞர்கள் அவரது உடலை எடுத்து எரித்து விட்டார்களென்றும், சமாதி வைக்க முடியாது போய்விட்டதாகவும் சொல்லி தனது கவலையை வெளிப்படுத்தினார். சுவாமிகளை அறிந்த ஒரேயொருவர் இணுவில் பெரியண்ணா ஆவார். 1987 ஆம் ஆண்டு சமாதியடைந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!