Saturday, April 5

கனகரத்தினம் சுவாமிகள், கந்தையா

0

திருநெல்வேலி தெற்கு என்ற பகுதியில் 1880 ஆம் ஆண்டு பிறந்தவரே கனகரத்தினம் சுவாமிகளா வார். வீட்டின் வறுமையை நீக்குவதற்காக மரவள்ளி பயிரிட்டு விற்ற பணத்தினை தாயிடம் கொடுத்து சந்தோசப்படுத்திய இவரை தாயார் “தனக்குப்போதும் இனி உனக்காகத் தேடிக்கொள் மகனே” என விடைகொடுத்தனுப்பினார். ஆனால் சுவாமிகள் தனக்காக அல்லாமல் அல்லலுறும் மக்களின் துயரைத் துடைப்பதற்காக ஞான வழியைத்தேடிக்கொண்டார். இக்காலத்தில் கடையிற் சுவாமிகளின் சீடரான சார்ஜன் சுவாமிகளின் தொடர்பு ஏற்பட்டது. இந்தியா சென்று சிவாலயங்களைத் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில் இறைவன் காட்சிகொடுத்து குருநாதரிடம் செல்லுமாறு பணித்தார். இவரும் யாழ்ப்பாணம் வந்து குருநாதரான சார்ஜன் சுவாமிகளிடம் சரணடைந்தார். கீரிமலையிலுள்ள சிறாப்பர்மடத்தில் வாழ்ந்து அருளாசி வழங்கிய மகானாக இவர் காணப்படுகின்றார். தவத்திரு மகாதேவசுவாமிகளுக்கு ஞான உபதேசம் வழங்கியவர். திருநெல்வேலியிலுள்ள சிவகுருநாதபீடம் இவரது சீடரான மகாதேவ சுவாமிகளினால் குருவான கனகரத்தினம் சுவாமிகளின் பணியினை சிறப்பிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டு அதன் முதலாவது பரமாச்சாரிய குருவாக அமர்ந்து இறை பணியாற்றியவர். 1922-09-14 ஆம் நாள் மகா சமாதி நிலையடைந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!