Saturday, April 5

நடராசன், செல்லையா

0

1923.11.14 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து தற்காலிகமாக குமாரசாமி வீதி கந்தர்மடம் என்னும் முகவரியில் வாழ்ந்தவர். தமிழ்மணி,சுடலையாடி,தமிழரசு தமிழ் நானா, பாலபாரதி, ஆடியபாதன், தமிழரசன், கலாபாரதி, தெல்லியூர் கலாபாரதி, ஜரதன், ஆடலரசன், கூத்தன், யாழ்பாடி, கலைஞானி என்னும் புனைபெயர்களில் பல்வேறு இலக்கியப் பணிகளையாற்றிய இவர் ஓர் அரச திணைக்கள மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். தமிழ், சமயம், சோதிடம், உளவியல், சாரணியம், வரலாறு, அரசியல் போன்ற துறைகளில் பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டவர். அந்தவகையில் தமிழன்மாட்சி, தங்கத்தாத்தா, ஓநாய்க்குருளை, குருளை மந்தை அமைப்பு பூரண குருளையாகும் வழி, கில்வெல் பேடன்பவெல்பிரபு, இளைஞரும் சாரணியமும், குருளைப்பரீட்சை, இளம்பாதன், சாரண நடுவன், சாரணமுதல்வன், அபலைப்பெண், வள்ளுவரின் அரசியல்ஞானம், திருவள்ளுவர் ஞானபோதம், ஈழநாட்டில் தமிழன்மானம், பௌதிக இரசாயன கலைச்சொல் அகராதி, ஆங்கிலத் தமிழ் தொழில் நுட்பச்சொல் அகராதி போன்ற பல நூல்களுக்குச் சொந்தக்காரர். கில்வெல் பேடன் பவெல்பிரபு ஆங்கிலத்தில் எழுதிய இளைஞர் சாரணியம் என்னும் பெருநூலை இளைஞர் சாரணியம் என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். யாழ்பாடி, ஜோதிடம், தமிழ்மணி, இளைஞன், வெள்ளியரங்க வாழ்க்கை ஆகிய பத்திரிகைகளை வெளியிட்டவர். வீரகேசரி பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராகவும், இந்துசாதனம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணியாற்றியவர். 2002.09.19 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!