Sunday, December 22

சிவபாதசுந்தரம், சுப்பிரமணியம் (சைவப்பெரியார்)

0

பருத்தித்துறை புலோலி என்னும் ஊரில் 1878.01.17ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பெற்றதோடு ஆங்கிலக் கல்வியையும் அதே பாடசாலையில் கற்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சிறந்து விளங்கியவர். மேற்படிப்பிற்காக திருச்சி திருவனந்தபுரத்து மகாராசாக் கல்லூரியில் படித்து எவ்.ஏ கல்வியில் சித்திபெற்று திருச்சி சென். யோசப் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றவர். புலோலியிலுள்ள சைவப்பாடசாலை, புலோலி வேலாயுதம் ம.வி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் தலைமையாசிரியராய் சிலகாலம் பணியாற்றி யாழ் பரமேஸ்வராக் கல்லூரியின் அதிபர் பதவியை அலங்கரித்தவர். இறுதி யாக சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மக்கள் சமயத்தை நன்குணர்ந்து சமய அறிவை விருத்தி செய்வதற்காக இவர் முருகனின் திருப்பெருவடிவம், சைவக் கிரியைகள் விளக்கம், கந்தபுராண விளக்கம், அப்பர் சுவாமிகளின் தோத்திரச் சிறப்பு, சமயம் கற்பிக்கும் முறைகளும் விதிகளும், திருவருட்பயன் உரை, திருவாசக மணிகள், திருக்குறள் மணிகள், சைவசமய சாரம், சைவசமயத்தின் பெருமை, இந்து மதத்தில் சைவசித்தாந்தம். சைவசமயசாரம் முதலாம், இரண்டாம், மூன்றாம் சைவபோதங்கள், கிரிசாம்பாள் கதை, துளசிந்தாமன் கதை போன்ற சமய நூல்களுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் அகநூல், அளவைநூல், படிப்பித்தலின் விதியும் முறையும் போன்ற பல நூல்களை ஆக்கியது டன் பிறநாட்டவர் சைவ சமயத்தினை நன்கு விளங்கிக் கொள்வதற்காக The Siva School of Hinduism, An outline of Sivagnana Bodham With A Rejoin or Teachristian Critic. Arumuganavalarஆகிய ஆங்கில நூல்களையும் வெளியிட்டு சைவத்திற்கும் தமிழிற்கும் பெருமை சேர்த்த இப்பெரியார் 1953.08.14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!