அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராகத் திகழும் இவர் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையினை மத்திய கல்லூரியிலிருந்து தனியாக இயங்க வைத்து பெண்கள் கல்லூரியினை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானுடன் ஒன்றாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கற்பித்தவர். விவிலியத்தினை ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்துதவியவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது உதவியுடன். நைல்ஸ். டி.ரி.(அருட்கலாநிதி) அருட்கலாநிதி டி.ரி.நைல்ஸ் அவர்கள் 1908ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளைப் பகுதியிலே பிறந்தார். நைல்ஸ் குடும்பத்தினுடைய பூர்வீகம் புன்னாலைக்கட்டுவன் ஆகும். இவருடைய கொள்ளுப் பேரனே (Great Grand Father) அமெரிக்கன் மிஷனரிமாரால் முதன் முதலாகத் திருமுழுக்காட்டப்பட்ட தமிழர்களில் ஒருவராக விளங்கினார். இவர் நதானியேல் நைல்ஸ் என்னும் பெயருடன் 1921.04.22ஆம் திகதி தெல்லிப்பளை ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்று திருச்சபையில் இணைந்து கொண்டார். நதானியேல் நைல்ஸ் அவர்களுடைய பேரனே வழக்கறிஞர் று.கு. நைல்ஸ் என்பவராவார். இவர் தன்னுடைய மகனாகிய டானியல் தம்பிராஜா நைல்ஸ் அவர்களும் தம்மைப்போல ஒரு வழக்கறிஞராக வரவேண்டும் என விரும்பினார். தந்தையினுடைய விருப்பத்துக்கு அமைய இவர் சட்டக் கல்லூரிக்குப் பதிவுசெய்யச் சென்றார். அவ்வேளையில் இந்துவான கணிதப் பேராசிரியர் C சுந்தரலிங்கம் அவர்களே D.T நைல்ஸ் அவர்களிடம் உமக்கு சட்டப் படிப்பு வேண்டாம் இறையியலைக் கற்று கடவுளுடைய பணிக்குச் செல்லும் என்று ஆலோசனை கூறினார். டி.ரி.நைல்ஸ் அவர்கள் பங்க;ர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் (UTC) இறையியல் கற்று முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார். 1933ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் கிறிஸத்தவ மாணவரியகக் மாநாடு (SCM – Student Christian Movement) இநத்தியாவில் நடைபெற்றது. வாலிபரான டி.ரி.நைல்ஸ் அவர்களுடைய பேச்சுத்திறனும் பக்தியும் பலரைக் கவர்ந்தன. 1938ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற “சர்வதேச மிஷன்களின் மாநாட்டிலும் மிகவும் வயதில் குறைந்தவராக இவர் கலந்து கொண்டார். 1948ஆம் ஆண்டு உலக திருச்சபைகளின் மாமன்றம் (W.C.C. Word Council of Churches) உதயமானது. அம்ஸ்டாமில் நடைபெற்ற இதன் முதலாவது கூட்டத் தொடரில் உரையாற்றும்படிக்கு டி.ரி.நைல்ஸ் அவர்கள் அழைக்கப்பட்டார். 1954ஆம் ஆண்டில் இதன் இரண்டாவது மாநாடு அமெரிக்காவில் இவன்கன்டனில் நடைபெற்றபோதும் இவர் சிறப்புரையாற்றும்படிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவர் தம்முடைய வாழ்வில் அநேக பதவிகளை வகித்துள்ளார். இலங்கைத் தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் (INCC) செயலாளராகப் பணியாற்றினார். உலகத் திருச்சபை மாமன்றத்தின் (INCC) வாலிபர் பகுதியின் முதலாவது தலைவராகவும் உலகத் திருச்சபை மாமன்றத்தினுடைய நற்செய்திப் பகுதியின் நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றினார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1940களில் மத்திய கல்லூரியின் அதிபராகவும் சிலகாலம் பணியாற்றினார். இவருடைய மனைவி பெயர் டல்சி, இவருக்கு பிறேமன் நைல்ஸ், தயாளன் நைல்ஸ் எனும் இரு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். டி.ரி.நைல்ஸ் தன்னுடைய கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வை இலண்டன் பல்கலைக்கழகத்திலே மேற்கொண்டார். அத்துடன் உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருடைய உலகத் திருப்பணிகளுக் காகவும், தலைமைத்துவங்களுக்காகவும் வாலிபர் மத்தியில் இவர் ஆற்றிய சேவைகளுக்காகவும் கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்கியுள்ளன. இவர் ஏறத்தாழ 39 நூல்களை எழுதியுள்ளார். இவர் இறக்கின்றபோது ஒரே நேரத்தில் ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய கிறிஸ்தவ சம்மேளனத்தின் (C.C.A) செயலாளராகவும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவராகவும் உலக திருச்சபை மாமன்றினுடைய ஆறு தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.