1943.05.25 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை என்னும் இடத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று இத்துறையில் செயற்படாது சாதனைகள் புரிந்து “கின்னஸ்” புத்தகத்தில் தனது பெயரைப்பதிவு செய்வதனையே குறிக்கோளாகக் கொண்டு அதற்கான முயற்சிகளிலும்ஈடுபட்டு ஏழு சாதனைகளை உலகசாதனைப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்தவர். நீச்சல் துறையில் உலக சாதனை செய்யும் பொருட்டு 1960 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறைக் கடற்கரையிலிருந்து தமிழ் நாட்டின் கோடிக்கரை வரையுள்ள 38 மைல் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தவர். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பதிவு இச்சாதனைக்குக் கிடைத்த வெற்றியாகும். இவருடைய சாதனைகளிற் குறிப்பிடற்குரியனவாக 10.05.1979 இல் விகாரமகாதேவி பூங்காவைச் சுற்றி 1487 மைல் தூரத்தினை 187 மணி 28 நிமிடத்தில் இடைவிடாது சைக்கிளில் ஓடியமை, 26.12.1977இல் தொடர்ச்சியாக 136 மணி 28 நிமிடங்கள் டீயடட Pரnஉhiபெ செய்தமை,கொழும்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் 15.05.1980 இல் இரு நிமிட நேரத்தில் 165 தடவை இருந்து எழும்பியமை, 1978 இல் தொடர்ச்சியாக 128 மணி நேரம் வுறளைவ னுயnஉந ஆடியமை, 1980 இல் 70 இறாத்தல் எடையுள்ள இரும்பினை 26 நிமிடம் 10 செக்கனில் 2000 தடவைகள் கீழிருந்து மேல் நோக்கி தூக்கியமை, 1981 ஓகஸ்ட்டில் 159 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக 296 மைல்கள் நடந்தமை, 30.06.1981 இல் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் 80 மணி நேரம் தண்ணீரில் மிதந்தமை போன்ற பல்வேறு சாதனைகளைச் செய்த இவர் 1984 ஓகஸ்ட் மாதம் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.