Saturday, April 5

ரேலங்கி செல்வராஜா

0

யாழ்ப்பாணம் -தெல்லிப்பளை குரும்பசிட்டியைச் சேர்ந்த இவர் பிரபல நாடகக் கலைஞன் கே.கே.வி.செல்லையாவினது புதல்வியாவார். சிறுவயதிலேயே ஆடற்கலையில் நாட்டம் கொண்ட வராகக் காணப்பட்ட இவரை தந்தையார் ஆடற்கலையில் பயிற்றுவித்து சிறந்த ஆடற்கலை வல்லுநராக மிளிர வைத்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறந்த அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியது மட்டுமல்லாமல் குரும்பசிட்டியைச் சேர்ந்த அருள் சிவதாசன் என்பவரால் தயாரித்து வெளியிடப்பட்ட “வாடைக்காற்று” திரைப்படத்திலும், “தெய்வம் தந்தவீடு” திரைப்படத்திலும் முக்கிய பாத்திரங்களிலும் ஆடற்கலை வெளிப்பாடாகவும் நடித்தவர். விநாயகலிங்கம் ஐயாத்துரை 1935.01.31 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கரகாட்டக்கலைஞன்.மேலும் காவடி, நாடகம் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவராயினும் கரகாட்டக் கலையிலேயே அதிக ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தவர். கரகாட்டத்திலகம் ஐயாத்துரை அவர்களின் புதல்வனாவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 2003-09-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!