Wednesday, February 5

கணேசமூர்த்தி, பொன்.

0

1950.02.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் வங்கியின் காங்கேசன்துறைக்கிளை முகாமையாளராகப் பணியாற்றிய இவர் நாடகம், கவிதை, இசை, திரைப்படம், குறுந்திரைப்படம், நூலாக்கம் எனப் பல்துறை ஆற்றலுடையவராயினும் நாடகக் கலைக்காக தன் வாழ்வை அதிகம் செலவிட்டவர். 1965 ஆம் ஆண்டிலிருந்து காங்கேசன்துறை இளந்தமிழர் மன்றத்தின் ஊடாக தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தவர். நாடககத்துறையில் எழுத்தாளராகவும், நெறியாளராகவும், நடிகராகவும், பாடகராகவும் செயற்பட்டவர். சந்தனக்காடு, சகுனியர்மூவர், மனுவிலங்கு போன்ற நாடகங்களுடன் சீதன அம்புகள் என்ற நாட்டிய நாடகத்தி னையும் எழுதியவர். இவரது சந்தனக்காடு யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்கெல்லாம் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது. மனுவிலங்கு என்ற நாடகம் 2004 ஆம் ஆண்டு தேசிய நாடக விழாவில் ஜோன் டீ சில்வா அரங்கில் மேடையேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. வானொலிக்காக நூறிற்கும் மேற்பட்ட வானொலி நாடகப் பிரதிகளை எழுதியவர். இவரால் நெறிப்படுத்தப்பட்ட “முழுவதும்” என்ற குறும்படம் குறிப்பிடத்தக்கது. அனல் பறக்கக் கவிபாடும் வல்லமை பெற்ற இவர் பல்வேறு கவியரங்குகளில் தலைமைக் கவிஞனாய் அமர்ந்து சிம்மக்குரலால் கவியரங்குகளைச் சிறப்பித்ததுடன் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து எழுக, எடுக்கவோ தொடுக்கவோ, துளித்துளி வைரங்கள், விடுதலைக் காவியம் போன்ற கவிதை நூல்களாக வெளியிட்டுள்ளார். இவரால் எழுதப்பெற்ற துளித்துளியாய், தூரம் தொடுவானம், இலங்கைமண் போன்ற நாவல்களும் குறிப்பிடத் தக்கன. 1970ஆம் ஆண்டு ஈழத்துப் பத்திரிகைத்துறையில் குமுறல் என்னும் பத்திரிகையை வெளியிட்டவர். 2006.08.04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!