அமெரிக்க மருத்துவரும் கிறிஸ்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்கமிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றிகண்டார். அறிவியல் தமிழிற்கு இவரின் முன்னோடிச் செயற்பாடு களுக்காக அறிவியல் தமிழின் தந்தையாக அறிஞர்களால் கணிக்கப்படுகிறார். 1822-10-10 ஆம் நாள் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டர் (Worcester) நகரில் பிறந்தவர். 1841 இல் நியூயோர்க் மருத்துவக் கல்லூரியில் (The College of Physicians and Surgeons of New York) இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார். யாழ்ப்பாணத்திலே தமது மி~னரிச் சேவையை நிலைப்படுத்திய அமெரிக்க மிஷன், மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்காக 1820 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் மருத்துவர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து மருத்துவர் நேதன் உவாட் பணியாற்றினார். உவாட்டின் சேவைக் காலம் முடிவடைய பணியை ஏற்றவர் தான் மருத்துவர் சாமுவேல் கிறீன். 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியைத் தொடங்கி, பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணிபுரியலானார். அம்மருத்துவமனை இன்று மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது. மருத்துவர் கிறீனின் மருத்துவ மாணவர்களின் முதல் தொகுதியினர் 1848-1853இல் வெளியேறினர். மருத்துவக் கல்வியை தமது கல்லூரியில் தமிழில் கற்பிப்பதென்று 1855 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தார். தமிழில் மேனாட்டு மருத்துவதை ஆரம்பித்த முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா சென்றார். தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் “தமிழருக்கான மருத்துவ ஊழியர்” (Medical Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் மருத்துவர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவுபடுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது. 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் – Cutter’s Anatomy, Physiology and Hygiene,204 g. இ 1857இ மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் -Maunsell’s Obstetrics, 258ப.இ 1857இ பிள்ளைப்பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம், (Midwifery) (1857)இ துருவிதரின் இரணவைத்தியம் – Druitt’s Surgery, 504ப.இ 1867இ கிறேயின் அங்காதிபாரதம் – Gray’s Anatomy, 838ப.இ 1872இ மனுசகரணம் – Dalton’s Physiology 590ப.இ 1 883இ வைத்தியாகரம் – (1872), கெமிஸ்தம் – Well’s Chemistry, 516ப.இ 1875இ வைத்தியம் (1875), கலைச் சொற்கள் (1875), இந்து பதார்த்தசாரம் -Pharmacopoeia and India 1884 (மொழிபெயர்ப்பு உதவி), வைத்தியம் – Practice of Medicine 1884 (மொழிபெயர்ப்பு உதவி) போன்ற பல நூல்களை வெளியிட்டு தமிழிற்கு சேவையாற்றிய இவர் 1884-05-28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
