Saturday, January 4

புனித அந்தோனியார் ஆலயம் – கச்சதீவு, நெடுந்தீவு

0

இலங்கையும் இந்தியாவும் அமைந்திருக்கும் இந்து சமுத்திரத்தில் உள்ள பாக்கு நீரிணையி;ல் அமைந்திருப்பது கச்சதீவாகும். தமிழ்நாட்டின் இராஜேஸ்வர மாவட்டத்திற்கும் இலங்கையின்யாழ்.மாவட்டத்திற்கும் இலங்கையின் யாழ். மாவட்டத்திற்குமிடையே ஏறக்குறைய 30 கடல்மைல் தூரம் கொண்ட இத்தீவானது சராசரியாக 4 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடையது. மக்கள் வலுக்கை இத்தீவில் கடற்றொழிலில் செய்வதற்காக செல்லும் தொழிலாளர்களின் காவல் தெய்வமாக விளங்குபவர் புனித அந்தோனியார். இவ்வகையில் மீனவர்களால் உருவாக்கப்பட்ட ஆலயமே கச்சதீவு புனித அந்தோனியாராலயமாகும். வருடத்தில் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைதிருவிழா அனு~;டிக்கப்படுகின்றது. இவ் வாலயமானது யாழ். ஆயர் அவர்களது ஆணையின் பிரச்சாரமே இவ்வாலய நிர்வாகம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1907 ஆம் ஆண்டு நெடுந்தீவு ஆசிரியர் ஜோசப் தனது தந்தையாருடன் படகில் எடுத்துச் சென்று அமைத்ததாகவும ; , தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் புயலில் அகப்பட்ட வேளைதன்னைக் காப்பாற்றினால் தான் அந்தோனியார் சிலையினை அமைத்து வழிபடுவதாகவும் நேர்ந்து. அதனால் உருவாகிய ஆலயமேஇவ்வாலயம் எனக் கதைகள் கூறுகின்றன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!