கடம்ப மரத்தினை தல விருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைப்பூரணை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்தொன்பது நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். கந்தச~;டி விரத நாளினையொட்டி விசேடமாக கொடியேறி ஏழு நாட்கள் திருவிழா நடைபெறுவதும் இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ சங்கர பண்டிதரவர்களால் ஆரம்பித்துவைத்த கந்தபுராணபடனம் இன்றுவரை தொடர்கின்றது. 1896முதல் தர்மகர்த்தா சபையாலும் 1968 முதல் பரிபாலன சபையாலும் நிர்வகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
