புத்தூர் மெதடிஸ்த தூதுக்குழுவினர் 1814-06-29 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். இவர்களது முதலாவது கல்விப் பணி 1816 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஸ்தாபித்ததுடன் ஆரம்பமாகியது.1842 ஆம் ஆண்டு புத்தூரில் ஒல்லாந்தர் கைவிட்டிருந்த தேவாலயத்தின் காணியினை பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் மெதடிஸ்த திருச் சபைக்குரியதாக்கப்பட்டு 1845 ஆம் ஆண்டு தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
