இற்றைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்டமைந்த இவ்வாலயம் நாவலரது காலத்தில் மடாலயமாக காலவரையறைக்குட்பட்ட பெயரினைக் கொண்டிருந்தாலும் விஸ்ணு வழிபாட்டிற்கான படிமங்களையே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.காலப்போக்கில் இவ்வாலயத்தினை ஆகம முறையிலான ஆலயமாக அமைக்க பெரும் பிரயத்தனத்தோடு மூன்று 1981-02-09 ஆம் நாள் மஹா கும்பாபிN~கத்தினை இவ்வூர் மக்களது பங்களிப்போடு நிறைவேறியது. ஆலயம் அமைந்திருந்த காணிகளின் உரிiமாளர்கள் ஆலயதத்திற்N;க காணிகளை அனப் ளிப்பாக வழங்கியமையால் மக்கள் ஏகோபித்த தமது வியர்வை சிந்திய தொண்டினால் கற்கோயிலாக கலையம்சம் நிறைந்ததாக எழுப்பினர். 1995-02-05 ஆம் நாள் இரண்டாவது மஹா கும்பாபிN~கம் நடந்தேறியது. 2007-01-28 ஆம் நாள் மூன்றாவது புனராவர்த்தன மஹாகும்பாபிN~கத்தினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. வல்லிபுரநாதரை மூலவராகவும் ஏனைய பரிவார மூர்த்தங்களையும் கொண்டமைந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதத்தில் வளர்பிறை திருவோண நட்சத்திரத்தினை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுவதுடன், பத்து வருடங்களுக்கொருமுறை சுழற்சியில் உபயகாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மகோற்சவம் நடத்தப்பட்டு வருவது இங்குள்ள சிறப்பம்சமாகும். வைஸ்ணவ பாரம்பரியத்தில் பாவை நோன்பு விரதமானது இவ்வாலயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புடையதாக அனு~;டிக்கப்படுவது குறிப்பிடற்குரியது.
