1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் பெண் பூசகர்களைக் கொண்டு நித்திய கிரியைகளை நிறைவேற்றும் ஆலயமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 1958 ஆம் ஆண்டு அலங்கார உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமையும் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலை எஸ்.வீ.சேவியர் என்ற கிறிஸ்தவர் ஆரம்பித்தார் என்றும் அவருடைய சமாதி இக்கோவிலின் பின்பக்கத்தில் இருப்பதாகவும் ஆலய நிர்வாகிகளால் பதியப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.