1932-12-21 ஆம் நாள் தெல்லிப்பளை – கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மாவிட்டபுரம் இசைமேதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி சோ.ப.உருத்திராபதி அவர்களி டம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தினைக் கற்று வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதரப்பரீட்சையில் முதலாம் தரத்தில் சித்தியடைந்து இசை ஆசிரியராக முகிழ்த்தார். 1958ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக்கல்லூரியில் இணைந்து சங்கீதபூ~ணம் பட்டம் பெற்றவர். கம்பீரமான குழைவான சாரீர வளத்தினால் கேட்போர் உருகிப்பிணிக்கும் வண்ணம் இவருடைய பாடல்கள் விளங்கின. வீணைப் பேராசிரியரான செல்வி கௌரி அம்மாவிடம் ருத்ரவீணையையும் கற்றுக் கொண்டவர். 2009-01-07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.