இணுவிலில் இருந்து கோண்டாவில் நோக்கிச் செல்லும் பாதையில் 100 மீற்றர் தூரத்தில் இணுவில் கிழக்கின் தெற்கெல்லையில் அமைந்திருப்பது தான் இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயமாகும். 1902 இல் பெரிய சந்நாசியாரால் இணுவில் கந்தனின் பெரிய மஞ்சத்திற்கான அடித்தளம் இவ்விடத்தில் வைத்து இடப்பட்டதனால் மஞ்சத்தடி என்ற காரணப்பெயர் இவ்விடத்திற்குரித்தானது. ஒரு நாள் பெரிய சந்நாசியாரது கனவில் முருகன் தோன்றி “நான் அருணகிரிக்கு உபதேசித்தவன் என்னைநினைத்து இங்கே எனது வடிவேலை வைத்து வணங்கு” என்று கூறி மறைந்தருளினார். இதனால் மகிழ்வுற்ற சந்நாசியார் அன்றைய தினமே தனது அரசோலை வளவில் வடிவேலை வைத்து சிறு கொட்டிலும் அமைத்து தானே விளக்கேற்றி அபிN~கம் செய்து மலர்மாலை சாத்தி, பொங்கல் படைத்து பூசை செய்து வந்தார்.பெரிய சந்நாசியார் சமாதியடைந்து சமாதி வைத்த இடத்தில் பதினாறாம் நாள் பெரிய சந்நாசியாரால் வணங்கப்பட்ட வேலாயுதத்தை சகோதரர் வேலாயுதர் மற்றும் உறவினர்கள், அடியார்கள் உட்பட எல்லோரும் ஒன்றுகூடி பிரதிஸ்டை செய்து அபிN~கம், பூசைகள் செய்து வழிபட்டனர். இவ்வாறு பெரிசந்நாசியாரால் உருவாக்கப்பட்ட ஆலயம் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைத் திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பன்னிரன்டு நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம்.