1918-02-08 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணை சிவன் ஆலய வடக்கு வீதியில் பிறந்து நல்லூர் ஆலயச்சூழலில் வாழ்ந்தவர்.சிவசுப்பிரமணியஐயர் என்ற இயற்பெயருடைய இவர் நல்லூர் ஆறுமுக நாவலர் பெருமானுக்குப் பின்னர் சைவமும் தமிழும் இம்மண்ணில் சிறந்தோங்க வழி செய்தவர்களில் ஒருவாராக விளங்குகின்றார். மணி ஐயா என அழைக்கப்படும் இவர் நல்லை ஆதீனத்தின் முதலாவது குருமணியாகவிருந்து தொண்டையினால் தொண்டு செய்த மகான். பாமர மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் கதாப்பிரசங்கம் நிகழ்த்துவதில் வல்லவர் . பதினெட்டாவது வயதில் தனது முதலாவது கதாப்பிரசங்கத்தினை வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலயத் தில் நிகழ்த்தினார். அன்றிலிருந்து யாழ்ப்பாணத்தின் பல ஆலயங்களிலும் தனது கதாப் பிரசங்கத் தினை நிகழ்த்தி வந்தார். நல்லூர் உற்சவ காலங்களில் இவர் நிகழ்த்திய கதாப்பிர சங்கத்திற்காக மணிபாகவதர் என்ற பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறைவழிபாட்டினையும், அறத்தினையும் வலியுறுத்தி நிற்கும் புராண, இதிகாச, சரித்திரக் கதைகளைக் கூறி ஆன்மீகத்தின் பால் மக்களை வழிநடத்திய பெருமகன். 1981-04-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்துக் கொண்டார்.