1932-09-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி வீதி என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கதம்பம் என்ற புதுமுறைக் கலை நிகழ்வொன்றினை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் இவருடைய நகைச்சுவைக் கதம்பம் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது. இக்கதம்ப நிகழ்வினூடாக சிந்தனையைத் தூண்டிய கலைஞன். திரைப்பட நடிகன், தெய்வம் தந்தவீடு, உறங்காத உள்ளங்கள், வாடைக்காற்று, ரத்தத்தின் ரத்தமே ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்தவர். இந்திய திரைப்பட நடிகர்களால் பாராட்டப்பெற்றவர். இவரும் இவருடைய தோழனுமான டிங்கிரி க.சிவகுரு என்பவரும் இணைந்து செயற்படுத்திய பல நகைச்சுவைக் கதம்பம் இன்றும் ஒலித்துக்கொண்டிருப்பதும் இக்கலையில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1989-10-13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.