Thursday, January 23

குமாரசாமிப்புலவர், அம்பலவாணபிள்ளை

0

1854-01-18 ஆம் நாள் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்தவர். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரையும் , பின்னர் முருகேச பண்டிதரிடம் தமிழையும், நாகநாதமுதலியாரிடம் சமஸ்கிருதத்தினையும் பயின்றவர். இலக்கணம், இலக்கியம், மொழிபெயர்ப்பு, அகராதி, நூல்களுக்கு உரை எழுதுதல், நூற்பதிப்பு, கண்டனங்கள் எனத் தமிழில் பணியாற்றி தமிழிற்குப்பெருமை சேர்த்தவர். 23செய்யுள் நூல்களையும், 13 இலக்கிய உரைநூல்களையும் 5 இலக்கண உரை நூல்களையும் யாத்து தமிழன்னையின் திருப்பாதங்களில் சமர்ப்பித்தவர்.இவரிடம் கற்ற மாணவர் களாக வித்துவ சிரோன்மணி கணேசையர், தென்கோவை ச.கந்தையாபிள்ளை, பன்னாலை வித்துவான் சிவானந்தையர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, மட்டக்களப்பு புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை முதலியவர்களைக் குறிப்பிடலாம். ஏழாலையில் சீ.வை. தாமோதரம்பிள்ளையவர்களால் நிறுவப்பெற்ற ஏழாலை சைவ வித்தியாசாலையில் 1878 – 1902 காலப் பகுதியில் ஆசிரியராகவும், வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் அதிபராகவும் பணியாற்றி யவர். 1922-03-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றரார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!