1943-08-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்த இவர் மொழியெர்ப்பு, உரைநடை, சிறுகதை ஆகிய துறைகளில் இவருடைய செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்ந்த வாசகனுக்குரிய நூற்தெரிவும் வரிகளை ஊடறுத்துச் செல்லும் ஆழமான பார்வையும் காரணமாக அவர் தான் படிக்கும் நூல்களையெல்லாம் மீளப் படைத்தார். இச் செயற்பாடுகள் வெறுமனே மொழியாக்குகை பகைப்புலத்தால் ஏற்பட்டது மாத்திரமன்றி அதிகமான விரிவான வாசிப்புப் பின்னணியினால் ஏற்பட்ட பாடநிலை ஊடாட்டத்தினாலும், சமூகப் பிரக்ஞை யினாலும் சிந்தித்த ஒன்றாகவிருந்தது. ஏஜே நவீன தமிழின் செழுமை மிகுந்த முன்னோடிகளின் வரிசையைச் சேர்ந்தவர். குறிப்பாக 1960 களில் இடதுசாரி – மார்க்சியச் சிந்தனைகளின் பல்வகைப் போக்குகள், மானுடவியல், சூழலியல், உளவியல், மொழிவரலாறு, அரசியற்கோட்பாடுகள், மருத்துவம், பொருளியல், தொன்மவியல், திரைப்டம்சார் கலை நடவடிக்கைகள், இலக்கியம் முதலியன பற்றிய ஆழமான முன்னறிவிப்புக்களை வழங்கியிருந்தார்.பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகத்திற் காக மொழிபெயர்த்த எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் அலைவெளியீடாக வந்த மார்க்சிய வாதிகளும், தேசிய இனப்பிரச்சினைகளும் ஆகிய நூல்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வொன்றாகும். 2006-10-11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.