Sunday, October 6

கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி (பண்டிதமணி)

0

1889-07-16 ஆம் நாள் சாவகச்சேரி – மட்டுவில் என்னும் ஊரில் பிறந்தவர். நாவலர் காவிய பாடசாலையில்,சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர், தென்கோவை கந்தையாபிள்ளை, ந.சுப்பையா பிள்ளை ம.க.வேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை, பொன்னம்பலப்புலவர் ஆகியோரிடம் கற்றவர். பேச்சு,மரபு வழிக்கவிதை, கட்டுரை, வானொலியுரை என்பவற்றுடன் பேச்சு, நூல் ஆக்கம், கவிதை பத்திரிகை, இலக்கணம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் தமிழை வழிநடத்தியவர். இலக்கிய வழி, கம்பராமா யணக்காட்சிகள், அன்பின் ஐந்திணை,அத்வைத சிந்தனை, கந்தபுராணக் கலாசாரம், நாவலரும் கோயிலும், கந்தபுராணப் போதனைகள், கண்ணகி தோத்திரம், கதிர்காம வேலன் சைவ நற்சிந்தனை, பாரத நவமணிகள், சிவராத்திரியிற் சிந்திக்க என்பன போன்ற பல நூல்களை எழுதியதுடன், அவற்றில் உள்ளடங்கிய கருத்துக்களை ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தில் பயின்ற பண்டித மாணவர்களுக்குப் போதித்தும் வந்தவர். மதுரைத்தமிழ் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றவர்.ரோல்ஸ்ரோய் என்பவரால் எழுதப்பெற்ற “இரண்டு பெரியவர்கள், முத்தான மூன்று சிரிப் புகள்” ஆகிய நூல்களைத் தழுவி பண்டிதமணி அவர்கள் “இருவர், யாத்திரிகர்” என்ற பெயரில் தழுவல் நூல்களாக எழுதியுள்ளார்.நவபாரதம் தழுவலற்ற சிறுகதையாகும். பத்தொன்பதாம் நூற்றான்டின் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமகன் பண்டிதமணி; என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். 1986-03-13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!