Friday, May 3

கணபதிப்பிள்ளை, க (பேராசிரியர் )

0

1902-07-02 ஆம் நாள் பருத்தித்துறை – புலோலி என்னும் ஊரில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் மொழி, கலை, இலக்கியம், சாசனம், நாட்டார் வழக்கியல், பண்பாட்டாய்வாளர், நாடக விமர்சனம் என இவரது ஆய்வுக்களம் பெரியது. பேச்சு மொழியில் குறிப்பாக பருத்தித்துறைப் பிரதேசத்திற்குரிய பேச்சு வழக்கு மொழியினைக் கையாண்டு இயற்பண்பு நாடக முறைமையை தமிழில் ஆரம்பித்து வைத்தவர். உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழ்க்கை ஆகிய நாடகங்களை உள்ளடக்கிய “நாநாடகம்” என்கின்ற நாடக நூலையும், “பொருளோபொருள்”, “தவறான எண்ணம்” ஆகிய நாடகங்களை உள்ளடக்கிய இருநாடகம் என்கின்ற நாடகநூலையும், வெளியிட்டவர். அத்துடன் யாழ்ப்பாண மன்னனாகிய சங்கிலியனுடைய வரலாற்றினைத்தொகுத்து சங்கிலி என்னும் வரலாற்று நாடக நூலையும் வெளியிட்டவர். பண்டைய பண்பாட்டுக் கோலங்களை எடுத்தியம்பும் காதலியாற்றுப்படை, மாணிக்கமாலை, நாநாடகம் , இரு நாடகங்கள், சங்கிலியன் நாடகம், ஈழத்து வாழ்வும் வளமும், இலங்கைத் தமிழர் வரலாறு , பூஞ்சோலை, வாழ்க்கையின் விநோதங்கள், நீராமகளிர் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது காதலியாற்றுப்படை என்னும் நூலானது யாழ்ப்பாணத்தின் பண்பாடு தொடர்பிலான ஆழமான பதிவுகளை வெளிப்படுத்தியிருப்பதுடன் யாழ்ப்பாணப் பண்பாட்டின் பதிவு ஆவணமாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 1968-05- 12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!