1894-12-17 ஆம் நாள் யாழ்ப்பாணம் வலிகாமம் சுதுமலைக் கிராமத்தில் நீண்ட வரலாறு கொண்ட ஆயுள்வேத வைத்தியர் மரபில் வைத்தியர் நந்தீஸ்வரர், வைத்தியர் சுப்பிரமணியம், வைத்தியர் நாகப்பர், வைத்தியர் ஆறுமுகம், வைத்தியர் நாகலிங்கம்பிள்ளை, பரம்பரையில் பிறந்தவர். தனது தந்தைவழியில் வைத்தியத்தினைக் கற்றுக்கொண்டது மட்டுமல்லாது இந்தியாவிற்குச் சென்று வைத்தியத்தினைக்கற்று தனது சித்த வைத்திய அறிவினை மேம்படுத்திக் கொண்டார். ஆரம்பக்கல்வியினை சுதுமலையில் பெற்றுக்கொண்ட இவர் யாழ்ப்பாணத்துச் சித்த பரம்பரையின ருடன் பெரியளவிலான உறவினை வைத்திருந்தார். ஈழத்தின் முதற்சித்தரான கடையிற் சுவாமிகள். செல்லப்பா சுவாமிகள், பேப்பர்சவாமிகள், குடைச்சுவாமிகள், யோகர் சுவாமிகள் என எல்லோருடனும் தொடர்புகளை வைத்திருந்து அவர்களின் அருளாசி யினையும் அன்பினையும் பெற்றிருந்தவர் மட்டுமல்லாது பல சித்தர்களது வாழ்க்கை வரலாற்றினையும் தெரிந்து வைத்திருந்தவர்களில் முக்கியமானவர். 1964-12-14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.